"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
04 பிப்ரவரி 2012

சட்டசபையில் ஜவாஹிருல்லாஹ் - N.R ரங்கராஜன் கடும் விவாதம்

0 comments

நேற்று வெள்ளிக்கிழமை சட்டசபயில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனிதநேய மக்கள்கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கும் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் இடையே வாக்குவாதம் நடந்தது.
பேரா.ஜவாஹிருல்லா பேசும்போது, "கச்சத் தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோனியார் திருவிழாவில் அனைத்து மதங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெறுவதால் அவர்களின் பாதுகாப்புக்கு கடலோர காவல் படை கப்பலையோ அல்லது தனியார் கப்பலையோ தமிழக அரசு சார்பில் இயக்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் யாருடைய தூண்டுதலுமின்றி நடந்து வருகிறது.அந்த நிலையத்தின் முதல் பிரிவின் மின் நிறுவு திறன் 1000 மெகாவாட்டாகும். உற்பத்தி மூலம் கிடைப்பது 700 மெகாவாட். அதாவது 70%. அதில், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு 35 மெகாவாட் தேவைப்படுகிறது. மீதியுள்ளது 665 மெகாவாட்டாகும். அதில் தமிழகத்துக்கு கிடைப்பது 299.25 மெகாவாட். இதனால், கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் தமிழகத்துக்கு 240 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும்.
இது தமிழகத்தின் தேவையில் 2%க்கும் குறைவாகும். மேலும்,அணுமின் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த பதிலையும் தரவில்லை. அணு உலை எதிர்ப்பாளர்கள் அமைத்த நிபுணர் குழுவுடன் பேசுவதற்கு அதிகாரம் இல்லையென மத்திய நிபுணர் குழுவினர் கூறுகின்றனர்.
என்.ஆர்.ரங்கராஜன் (காங்கிரஸ்) பேசும்போது, கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதில் தமிழகத்துக்கு 900 மெகாவாட் கிடைக்கும். விஞ்ஞானி அப்துல் கலாம் உள்பட அனைவருமே அணுமின் நிலையம் பாதுகாப்பானது என உறுதி கூறியிருக்கிறார்கள்.
ஜவாஹிருல்லா (ம.ம.க):அணுஉலை எதிர்ப்பாளர்களை கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல் அவர்களுக்கு மதச்சாயம் பூசப்படுகிறது. எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்திய அரசை ஆளும் கட்சிக்கு தொடர்பு இருக்கிறது.
என்.ஆர்.ரங்கராஜன்: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியினருக்குத் தொடர்பில்லை.
இவ்வாறாக மமக-காங்கிரஸ் கட்சிகளிடையே விவாதம் தொடர்ந்தது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி