மார்ச்,8- சூரியனில் அடிக்கடி புயல் ஏற்பட்டு வருகிறது. இன்று ஏற்படும் சூரிய புயல் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்று மாலையில் தொடங்கி நாளை காலைக்குள் இது பூமியை தாக்கலாம் என்று கணித்துள்ளனர். இது சக்தி வாய்ந்த புயலாக இருக்கும். எனவே இதன் தாக்குதலால் செயற்கை கோள்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தகவல் தொடர்புகள் போன்றவை பாதிக்கப்படலாம்.
விமாங்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். 1972-ம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கியது. அப்போது அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்பட்டன. இந்த புயலும் அதே போல சக்தி வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மணிக்கு 40 லட்சம் மைல் வேகத்தில் சூரிய புயல் பூமியை நோக்கி வரும் என்று கணித்துள்ளனர். விமானங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் புயல் தாக்கும் வாய்ப்புள்ள பகுதி வழியாக செல்ல வேண்டாம் என விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
thanks : muthupettaibbc