முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?
பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.
100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.
அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.
பொட்டாசியம் சத்து அதிகம் காய்கறி, பழங்களிலேயே ராஜா எது?
உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் பாதிப்பின்றி இருக்க சரிவிகித உணவு, உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக ஆரோக்கியத்துக்கு ஆதாரமாக இருப்பது அனைத்து வைட்டமின்களும் சத்துகளும்தான். எனினும், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக கூறுவார்கள். ஆனால், சமீபத்திய ஆய்வில் கிழங்கு மனிதனின் ஆரோக்கியத்துக்கு பெரும் பங்கு வகிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பொட்டாசியம் சத்து மனிதருக்கு ஒரு நாளைய சக்தியை அளிக்கிறது. இது எந்த காய்கறி, பழங்களிலும் அவ்வளவாக இல்லை. ஆனால், உருளை கிழங்கில் இந்த சத்து அதிகமாக உள்ளது. எனவே, காய்கறி, பழங்களிலேயே உருளை கிழங்குதான் ராஜா என்கின்றனர். சமீப காலமாக உலகம் முழுவதும் ஏராளமானோர் பொட்டாசியம் சத்து குறைபாட்டால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உருளை கிழங்கு இந்த குறைபாட்டை எளிதாக போக்கும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு நாளைக்கு மனிதனுக்கு சுமார் 4,700 மி.கி. பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. காய்கறிகள், பழங்களுடன் ஒப்பிடும் போது உருளையில் இந்த சத்து அதிக அளவு உள்ளது. டாக்டர்களின் அறிவுரைப்படி இதை உண்ணலாம் என்கின்றனர். அதை விட உருளை கிழங்கு சாப்பிடுவதால் பக்க விளைவோ பாதிப்போ இல்லை என்கின்றனர்.
கதிர்வீச்சை தடுக்கும் தேயிலை!
தலைவலியாக இருந்தாலும் சரி, கொஞ்சம் டல்லாக இருப்பது போல தெரிந்தாலும் சரி, சூடாக டீ என்ற தேநீரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி நிச்சயம். அந்தளவுக்கு தேநீருக்கு சக்தி உண்டு. தேநீரின் மூலப்பொருளான தேயிலையில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதயம் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சக்தியாக உள்ளது தேயிலை. மூளையில் உள்ள ரத்தக் குழாய்களை சற்று விரிவடையச் செய்ய வைப்பதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டி நமது வேலை செய்யும் திறனை அது முறுக்கேற்றுகிறது. தேநீரில் உள்ள அமினோ அமிலமான ‘காட்டாசின்’ உடலில் சேருகிறது. இந்தக் காட்டாசினில் வைட்டமின் ‘பி’ சக்தி நிறைந்திருக்கிறது. இது தந்துகிக் குழாய்களைப் வலுப் படுத்தும் சக்தி படைத்தது. மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் சிட்ரின்,ருட்டின், எஸ்குலைன் போன்ற பொருட்களைக் காட்டிலும் காட்டாசினுக்கு சக்தி அதிகம். ‘காட்டாசின்’ என்ற பொருளுக்கு கதிர்வீச்சு முறிப்புக் குணமும் உண்டு. மனித உடலில் ‘ஸ்டிரான் ஷியம் 90’ ஏற்படுத்தும் தீய விளைவுகளை முற்றிலும் அகற்றி விடும் இது.
கதிர்வீச்சு ‘ஐஸோடோப்’ எலும்பு மஜ்ஜையை அடையும் முன்னர் அதனை இப்பொருள் உறிஞ்சி விடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தந்துகிகளை வலுவாக்குவதன் மூலம் மனித உடலில் ‘அஸ்கார்பிக்’ அமில அளவு சீராகிறது. காட்டாசினுக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மையும் உண்டு என்று லேட்டஸ்ட் ஆய்வுகள் கூறுகின்றன. விதவிதமான தேநீர் வகைகள் யாவும் ஒரே செடியில் இருந்து பறிக்கப்படும் இலைகளை வெவ்வெறு வித மாகப் பதப்படுத்துவதன் மூலம் கிடைப்பவைதான். பதப்படுத்தும் முறையைப் பொறுத்து அவற்றின் தரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தேயிலையில் இரண்டு வகை உள்ளன. அவை சீனத் தேயிலை (சைனன்சிஸ் வகை), அசாம் தேயிலை (அசாமிக்கா வகை). பச்சைத் தேயிலை சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. இது ‘கேமில்லியா’ என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது படிப்படியாக மேற்கு மற்றும் கீழை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பச்சைத் தேயிலைத் தயாரிப்பின்போது இலைகள் உலர்த்தப்படுகின்றன. ஊற வைத்து நொதிக்க வைக்கப் படுவதில்லை. வியாபார ரீதியாகத் தயாரிக்கப்படும் பச்சைத் தேயிலையில் முக்கியமாக நான்கு ‘பாலிஃபீனால்கள்’ உள்ளன. இவை மொத்தமாக ‘கேட்டகின்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை மிகுந்த சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் ஆகும். அதாவது இவை நமது வேதியியல் பண்பினால் ஆக்ஸிகரணமாகும் செயல்களைத் தடைப்படுத்துகின்றன. இதனால் கேட்டகின்களால் வைரஸ்களை எதிர்கொள்ள முடிகிறது.
பச்சைத் தேயிலையில் ஒருவர் தேநீர் தயாரித்து குடித்து வந்தால், நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். அதேபோல புற்றுநோய் செல்கள் பிரிந்து வளர்வதையும் இது தடுக்கிறது. பல வகையான புற்று நோய்களில் இருந்து பச்சைத் தேயிலை நமக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது என்று அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
வளர்ந்த நாடுகளுள் சீனாவில் இதய மற்றும் ரத்தக் குழாய் நோய்கள் 80% குறைவாக இருக்க இதுவே காரணம். ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பச்சைத் தேயிலை மூளையில் முதுமை ஏற்படுவதைக் குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் அதிகம் இருப் பதால்தான், உலகில் பல நாட்டு மக்களும் தேநீருக்கு ‘ஓ’ போடுகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் காஃபியைத்தான் அதிகமாக அருந்துவ தாகச் சொல்லும் ஆய்வுத் தகவல்தான் வினோதமாக இருக்கிறது!

வெயிட்டான வைட்டமின்கள் தேவை!
மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், பலவித சத்துகளும் தேவை. இதில் முக்கியமானவை, வைட்டமின் சத்துகள். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 5 லட்சம் குழந்தைகள் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறையால் பார்வை இழக்கிறார்கள் என்கிறது பிரிட்டன் ஆய்வு. புற்றுநோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறை ஒரு காரணம் என்று அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவால் இரவில் பார்வை மந்தம், தோல் வறட்சி, எளிதாக சளி பிடிப்பது, எலும்பு வளர்ச்சியின்மை, பாலியல் உறுப்புகள் பிரச்னை என நிறைய பாதிப்புகள் மனிதனைத் தாக்க காத்திருக்கின்றன. இந்தப் பிரச்னைகளை தினமும் 500 மில்லி கிராம் வைட்டமின் ‘ஏ’ சத்தினை உட்கொள்ளுவதன் மூலம் விரட்ட முடியும். எப்படி? வைட்டமின் ‘ஏ’ அதிகம் நிறைந்திருக்கும் பால், முட்டை, மஞ்சள் கரு, வெண்ணெய், மாம்பழம், பப்பாளிப்பழம், பேரிக்காய், பலாப்பழம், ஆரஞ்சு, தக்காளிப்பழம், பச்சை கேரட் ஆகியவற்றை உண்டாலே போதும். இவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது. சிகரெட் பிடித்து புகையை ஊதித்தள்ளு பவர்கள் இனி கொஞ்சம் விழிப்பாக இருப்பது நல்லது. ஆமாம், சிகரெட் பிடிப்பவர்கள் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தால் போதும், 25 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யை சிகரெட் எடுத்துக் கொள்கிறது. தினமும் உணவில் அதிகமாகப் புரதச் சத்து உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்பவர்கள், வைட்டமின் ‘சி’யையும் அதிகம் சேர்க்க வேண்டும். புரதச்சத்து உடலில் அதிகரிக்கும்போது வைட்டமின் ‘சி’ தேவையும் அதிகரிக்கிறது.
அதற்குத் தகுந்தாற்போல் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ள உணவுகளைச் சேர்கக வேண்டும். வைட்டமின் ‘சி’ குறைவால் உள்காயங்கள், பலவீனமான எலும்பு, பல், ஈறு நோய்கள், சோம்பேறித்தனம், களைப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். சராசரியாக ஒவ்வொரு வருக்கும் தினம் 400 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’ தேவை. இது கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளிப் பழம், சாத்துக்குடி, தக்காளி, முட்டைக்கோசு, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது. நாம் அதிகம் கவலைப் படாத ஒரு வைட்டமின் என்றால், நிச்சயம் அது வைட்டமின் ‘ஈ’-யாகத்தான் இருக்கும். உண்மை யில் வைட்டமின் ஈ இல்லா விட்டால், வைட்டமின் ‘ஏ’யும் ‘சி’யும் உடலில் அழிந்துவிடும். இந்து இரு வைட்டமின்களையும் பாதுகாப்பதுதான் ஈ-யின் முக்கிய வேலை. இது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுவாக்குகிறது. வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். ரத்தம் உறையாமை நோய் உள்ளவர்கள் வைட்டமின் ‘ஈ’ உணவு வகைகளை அதிகம் சேர்க்கக் கூடாது. அப்படி சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. பட்டாணிக்கடலை, கோதுமை, ரவா, புழுங்கலரிசி, முட்டை, சூரியகாந்தி விதை ஆகியவற்றில் வைட்டமின் ‘ஈ’ அதிகம் உள்ளது.