"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 மார்ச் 2012

+2 தேர்வுக்குத் தயார் செய்து வருகிறீர்களா ?.

0 comments
உங்களுக்கு இன்டர்நெட்டில் எந்த தளத்தில் பழைய மற்றும் மாடல் வினாத்தாள்கள் கிடைக்கும்.
http://dge.tn.gov.in/question_bank.htm: இங்கு 2006 முதல் 2011 முதல் கேட்கப்பட்ட வினாத்தாள்கள் அனைத்து பாடங் களுக்கும் கிடைக்கும். மாதிரி வினாத்தாள்களைப்பெற http://dge.tn.gov.in/questbank/Plus2Qbank/year2011/default.htm என்ற முகவரிக்குச் செல்லவும்.
http://dge.tn.gov.in/ என்ற பெயரில் அரசு தேர்வுகள் இயக்ககம் தன் இணைய தளத்தைக் கொண்டுள்ளது. இங்கு சென்றால், நீங்கள் வழி நடத்தப் பெறுவீர்கள்.
40,000 இந்தியர்களுக்கு ஐரோப்பாவில் பணி
இனிவரும் காலங்களில் குறைந்தபட்சம் 40,000 இந்தியர்கள், ஐரோப்பாவில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுக்கிடையிலான திறந்த வர்த்தக ஒப்பந்தத்தின்(Free Trade Agreement) அடிப்படையில் இது சாத்தியமாகிறது. எந்தவித பணியாளர் சந்தை சோதனைக்கும்(Labour Market Test) உட்படாமல் இவர்கள் ஐரோப்பாவில் பணிபுரிய முடியும்.
இந்த 40,000 பேரில், 12,000 பேர் பிரிட்டனில் பணிபுரிவார்கள். இந்தியாவிற்கும்,ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக, &'டெய்லி மெயில்&' என்ற பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.
மேலும், இதன்மூலம் ஐடி துறை பணியாளர்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான படிப்பு

இந்தியாவின் சர்வதேச வணிகம் வளர்ச்சியடைய வேண்டுமெனில், கடல் மற்றும் கடல் போக்குவரத்தில் நம் நாடு நிபுணத்துவம் பெற வேண்டும். மாணவர்கள், அந்த தகுதியைப் பெறுவதில், B.Sc Nautical science படிப்பு உதவி புரிகிறது.
இந்தப் படிப்பானது, கடலில் பாதுகாப்பாக பயணம் செய்தல் மற்றும் கப்பலை இயக்குவது குறித்து பயிற்சியளிக்கிறது.
படிப்பின் அம்சங்கள்
இவைத்தவிர, இடவமைப்புகளைக் குறித்தல், சேதார தடுப்பு செயல்பாடுகள் மற்றும் சரக்கு கப்பலை கையாளுதல் உள்ளிட்ட விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன. பள்ளி மேல்நிலையில், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் படித்த மாணவர்களே, இந்தப் படிப்பை மேற்கெள்ள முடியும். உங்களுக்கு கடல்சார் துறையில் தீவிரமான ஆர்வமிருந்தால், இந்தப் படிப்பு உங்களுக்கு ஏற்றது.
பணி வாய்ப்புகள்
கடல்சார்ந்த முன்பயிற்சிகளை முடித்தப் பின்னர், மாணவர்கள், கப்பல் கம்பெனிகளில் சேர்ந்து Nautical deck cadet என்ற பதவியைப் பெறுகிறார்கள். இந்த அனுபவத்தை ஒரு வருடம் பெற்றபிறகு, Deck cadet ஒரு போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சிப்பெற்று, அதற்கான சான்றிதழைப் பெற்றவுடன், அவர், உலகில் எங்கு வேண்டுமானலும் எந்தக் கப்பலையும் செலுத்தும் தகுதியைப் பெறுகிறார். அதிக அனுபவம் மற்றும் அதிக தகுதித் தேர்வுகளை எழுதி தேறும் ஒருவர், ஒரு கப்பலின் முதன்மை அதிகாரி மற்றும் கேப்டன் என்ற நிலைக்கு உயர்த்தப்படுகிறார்.
கேப்டனின் பொறுப்பு
கப்பல் கேப்டன் என்பவர் &'கடல் கடவுள்&' என்று அழைக்கப்படுகிறார். ஒரு கடற்பயணத்தின் வழியை திட்டமிடுதல் மற்றும் வழிநடத்துதல், ஆபத்தான சூழல்களில் கப்பலை நிர்வகித்தல் போன்ற பெரும் பொறுப்புகள் கேப்டனுக்கு உண்டு.
கற்பித்தல் செயல்முறை
B.Sc Nautical Science படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், காலையில் 5.30 மணிக்கு எழுந்து, தங்களது சீருடையில் அணிவகுப்பு மேற்கொள்ள வேண்டும். இதன்பிறகு,வகுப்பறை கற்பித்தல் மேற்கொள்ளப்படும்.
சம்பளம்
Navigating officer என்ற பதவிக்கான ஆரம்ப சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. ஒரு கேப்டனின் சம்பளம் மாதம் சுமார் 8000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும்.
நாடிகல் அறிவியல் பாடங்கள்
Applied Mathematics, Electricity & Electronics, Navigation, Cargo Handling, Seamanship, Ship Operations, International Code of Signals.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி