"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 மார்ச் 2012

பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 6

0 comments

அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட நான், மிகப்பெரிய அரங்கத்தின் நுழைவாயிலை நோக்கி பயணமானேன். நுழைவாயிலில் நடைமுறைப் பணிகளை முடித்துக்கொண்டு அருகே ராஜ கம்பீரத்துடன் காட்சியளிக்கும் உயர்ந்த சீன மனிதன் காட்சிப் பொருளாக நிற்பதைக் கண்டு வியந்தேன். காரணம் யாராலும் அவனை சிரிக்க வைக்கமுடியவில்லை !

குவாங்சோ “ ( Guangzhou ) நகரில் முக்கிய பகுதியாக கருதப்படுகிற இடங்களில் ஓன்று Pazhou மற்றொன்று Liuhua இப்பகுதியில் அமைந்துள்ள அரங்கங்களில் நடைபெறுகின்ற இவ்வணிகச்சந்தை, மூன்று கட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கட்டங்களும் முறையே ஒரு சிறிய இடைவெளியுடன் ஒவ்வொன்றும் ஐந்து நாட்கள் நடைபெறும்.

முதல் கட்டமாக..........................................................

1. Large Machinery and Equipment
2. Small Machinery
3. Bicycles
4. Motorcycles
5. Vehicle Spare Parts
6. Chemical Products
7. Hardware
8. Tools
9. Vehicle ( Outdoor )
10. International Pavilion
11. Household Electrical Appliances
12. Consumer Electronics
13. Lighting Equipment
14. Sanitary and Bathroom Equipment
15. Construction Machinery ( Outdoor )
16. Building and Decorative Materials
17. Computer and Communication Products
18. Electronic and Electrical Products

மேற்கண்ட வரிசைப்படுத்தப்பட்ட பொருட்கள் பல்வேறு நிறுவனங்களால் ஒவ்வொரு அரங்குகளிலும் அமைக்கப்பட்டிருக்கும்.


எனது கையில் உள்ள “ Booth No. List “ களை எடுத்து வைத்துக்கொண்டேன்.

“ Booth No. “ என்றால் என்ன ?

ஒவ்வொரு அரங்கிலும் A, B, C, D………………………… ( Alphabetic ) என வரிசைப்படுத்தபட்டு ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஓர் எண் கொடுக்கப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, Booth No. 20.2B7

அரங்கின் எண் : 20
தளம் ( Floor ) : 2
நிறுவனத்தின் எண் : B7

குறிப்பெடுத்து வைத்திருந்த “ Booth List “ ல் முக்கிய நிறுவனங்களைக் கண்டறிந்து அதன் அரங்குகளுக்கு ஒவ்வென்றாகப் போக எண்ணினேன்.

இதன்படி முதலாவதாக..................................

Air-condition” சாதனங்களை தயாரிக்கக் கூடிய சீன தேசத்தில் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாகிய “ஒரு” குறிப்பிட்ட நிறுவனத்திற்குச் சென்றேன்.

இங்கே பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் உலக சந்தைகளைக் கீழ் கண்டவாறு பிரித்து ஒவ்வொரு சந்தைகளுக்கும் ஒர் நிர்வாகி மற்றும் அவரின் கீழ் இரு உதவியாளர்கள் என பணியில் நியமித்து இருப்பார்கள்.

1. Europe
2. America
3. Middle East & North Africa
4. South East Asia
5. Australia & New Zealand

சீன நிறுவனங்களைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களை வரவேற்க்கும் பண்புகள் மிகச் சிறப்பாகவே இருக்கும். எந்தவித பாகுபாடுகள், ஏற்றதாழ்வுகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் தலைமை நிர்வாகியின் வரவேற்பை முடித்துக்கொண்டு..........................


இறைவன் நாடினால் ! பயண அனுபவங்கள் தொடரும்..............

ஆக்கம் : சேக்கனா M. நிஜாம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி