மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார கட்டணத்தை உயர்த்தாததால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆணையத்திடம் எடுத்து கூறியது.
அதனால் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என முடிவு செய்து மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த நவம்பர் சமர்ப்பித்தது.
அதைத்தொடர்ந்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின்கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.
இதையடுத்து மின்சார கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம், வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, கட்டணம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கு கட்டண உயர்வு எப்படி அமல்படுத்துவது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியம் கொடுத்த கட்டணத்தில் ஒருசில மாற்றங்களை ஒழுங்குமுறை ஆணையம் செய்துள்ளதும் மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின் கட்டணம் உயர்வு குறித்த முறையீடு செய்து 120 நாட்களுக்குள் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் அடுத்த வாரத்துடன் 4 மாதங்கள் முடிகிறது. எனவே அதற்கான அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது.
ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த மின்சார வாரியம் தயாராக உள்ளது. மின் கட்டணம் உயர்த்தப் படுவதால் வாரியத்தின் வருவாய் உயரும். வருவாய் உயரும் என்ற காரணத்தை காட்டித்தான் மின்வாரியம் புதிய கடன்களை வாங்கி உள்ளது.
நிதி நெருக்கடி தொடர் நஷ்டத்தால் சிக்கி தவிக்கும் மின்சார வாரியம் மின் கட்டண உயர்வை தள்ளி போட வழியில்லை. எப்படியும் 1-ந்தேதி அமலுக்கு வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி