அதிரை ஏ.எல்.மெட்ரிக். பள்ளியில் இன்று ( 15-03-2012 ) நடைபெற்ற ஆண்டு“விளையாட்டு” விழாவில் பள்ளியின் நிறுவனர் சகோ. ஜனாப் அப்துல் ரெஜாக், பள்ளியின் நிர்வாகி சகோ. ஜனாப் பஷிர் அஹமது, பள்ளியின் முதல்வர் லட்சுமி ப்ரியா ஆகியோர்கள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.
சிறப்பு விருந்தினர்களாக அதிரை பேரூராட்சி உறுப்பினர்கள் சகோதரிகள் ரபீக்கா மற்றும் சௌதா ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஏராளமான பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆக்கம் : - சேக்கனா M. நிஜாம்