குவைத்தில் உள்ள முஷ்ரிப் பகுதியில் உள்ள பூங்காவில் நிர்வாண மனிதன் நடமாடுவதாக வரும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
முஷ்ரிப் பகுதியில் உள்ள பூங்காவில் மாலை நேரங்களில் நிர்வாண மனிதன் நடமாடுவதால் பீதியுற்ற பெண்கள் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் அங்கு பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் எவ்வளவு தேடியும் நிர்வாண மனிதன் கிடைக்காததால் காவல்துறையினர் ஏமாற்றமடைந்தனர். தற்போது காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.