"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 மார்ச் 2012

குழந்தைகளுடன் சுற்றுலா பயணம் போவோருக்கு...

0 comments

குழந்தைகளுடன் சுற்றுலா பயணத்தில் குழந்தைகளாக பாத்ரூம் போகணும் என்று கேட்கும் வரை வைத்துக் கொள்ளாமல் நீங்கள் அவ்வப்போது அவர்களை பாத்ரூமிற்கு அழைத்துப் போக வேண்டும். வரவில்லையென்றால் கட்டாயப்படுத்தாமல் அரை மணி நேரம் கழித்துக் கேளுங்கள். மாற்றுடை கைவசம் எப்போதும் இருக்க வேண்டும். தண்ணீர் குடிக்கையில் சட்டை ஈரம் ஆனாலோ உடனே மாற்றிவிட்டு ஈரத்தை உலர வைக்க வேண்டும். அதே போல் உள்ளாடைகள் இரண்டாவது எக்ஸ்ட்ரா வேண்டும்.ப்ளாஸ்டிக் கவர் இரண்டு மூன்று வைத்துக் கொள்ள வேண்டும்.

டிராவல் மெடிசன்ஸ் என்று குடும்ப வைத்தியரிடம், குழந்தைகளுக்காக கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளவும். (ஜுரம், இருமல், டயரியா, ...பாண்ட் எயிட்..) அதை ஹோட்டல் ரூமில் வைத்து விடாமல் நீங்கள் வெளியே டூர் போகும் போது எடுத்துக் கொள்ளவும்.

குழந்தைகள் உங்கள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் ஒரு ஆல்டர்னேடிவ் வைத்துக் கொள்ளவும். எதிர்பாராதவிதமாக நாம் போகும் இடம் மூடியிருக்கலாம், அப்போது நாம் பெரிசாக அலட்டிக் கொள்ளாமல் குழந்தைகளிடம் எடுத்து கூறி வேறு ஏதாவது இடத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்து செல்லவேண்டும்.

குழந்தைகளுக்கு நாம் பொறுமையாக ஆர்வமூட்டும் வகையில் நமக்குத் தெரிந்தவற்றை விளக்க வேண்டும். அவர்கள் ஏதாவது புதுமையான கேள்வி கேட்டால் விசாரித்துக் கூட பதில் கூறலாம்.

எல்லா இடமும் சுற்றி விட்டு மாலை, இரவு வீடு அல்லது ஹோட்டலுக்குத் திரும்பும் போது அசதி ஆளை அடித்துப் போடும். அப்படியே தூங்கி விடாதீர்கள். நீங்களும் சரி, குழந்தைகளும் சரி ஒரு குளியல் போட்டு விடுங்கள். காலை மாலை இருவேளையும் குளித்தால் புத்துணர்ச்சியைத் தரும். மறுநாள் சுறுசுறுப்பாக இருப்பதை உணர்வீர்கள்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி