"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 மார்ச் 2012

புற்றுநோய் எச்சரிக்கை!

0 comments

மக்களிடையே பெருகிவரும் புற்றுநோய் குறித்து நமது சமூகநீதி முரசு இதழில் பலமுறை தலையங்கமாகவும் கட்டுரைகளாகவும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். சமூகநீதி அறக்கட்டளையின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெளியூர்களில் நடைபெறும் கல்வி மாநாடுகளிலும் இன்றைய இந்த சீர்குலைந்து போன வாழ்வியல் முறையை தொடர்ந்து எச்சரித்தே வருகின்றோம்.
கடந்த 15, 20 ஆண்டுகளாக பாதை மாறிப்போன நமது வாழ்க்கை முறையினால் ஏற்பட்ட விளைவுகள் தான் இன்றைய இந்த சமூக சீரழிவு. எப்போதும் விளைவுகள் ஏற்படுகின்ற நேரத்தில் கூச்சல் போடும் சமூகமாகவே முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகிறது. மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அது குறித்தான எச்சரிக்கை செய்யும் தலைவர்களும் சமூக அமைப்புகளும் இல்லாமல் போனது தான் அதற்குக் காரணம்.

சமீப காலமாக வெளிவரும் நோய்கள் குறித்த ஆய்வறிக்கைகளை படிக்கும் போது எதிர்கால தலைமுறைக்கு சர்க்கரை நோய், புற்றுநோய், சிறுநீரகம் பாதிப்பு, போன்ற நோய்கள் அதிகம் தாக்குவதற்கான வாழ்க்கை முறைகளையும், சுற்றுச் சூழலையும் மட்டுமே கற்றுக்கொடுத்து விட்டுப்போகிறோம் என்பது நிச்சயமாக தெரிகிறது.

இந்தியாவிலேயே குமரி மாவட்டம்தான் புற்றுநோய் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருப்பதால்தான் இந்த நிலை என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். அதேபோல சமீபத்தில்வந்த சில ஆய்வுகள் கடலூர் மாவட்டத்தை கலக்கிப் போட்டுவிட்டது. கடந்த ஒரு சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தின் பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் மருத்து வர்கள் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தினம் ஒரு
புற்றுநோயாளி கண்டறியப்படுகிறார். அதுவும் குறிப்பாக 20, 30 வயது வாலிபர்கள்தான் அதில் அதிகம் என்றும் கூறுகின்றனர். நுரையீரல், மார்பு, தொண்டை, மற்றும் சிறுநீர் பாதைகளில் தான் புற்று நோயின் தாக்கம் கண்டறியப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.]

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்தினர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பத்திரிகை செய்தி வந்துள்ளது. சமீபத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
செல்போன் பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை நாம் சமூகநீதி முரசில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். ஆனால் 7 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து செல்போனில் பேசினால் அதன் கதிர் வீச்சுகள் உடலின் வலிமை குன்றிய திசுக்களில் உடலில் மொத்த எடையில் 1 கிராம் அளவுக்கு பாதிப்பை உண்டாக்கிறது என்ற தகவலை மத்திய அரசு தகவல் ஆணையம் மூலம் தந்துள்ளது. எப்போதுமே செல்போன் நிறுவனங்களின் விளம்பரங்களுக்காக வாய்பிளந்து நிற்கும் நமது பத்திரிகைகள் அந்தச் செய்தியை அவ்வளவாக வெளியிடுவதில்லை!

புதிது புதிதாக வெளியாகும் தொழில் நுட்பங்களும் நவீன எலக்ட்ரானிக் கருவிகளும் மக்களுக்கு வசதி வாய்ப்புகளை பெருக்குகிறது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு அதன் எதிர் விளைவுகள் மிகக் கடுமையானவை என்பதும் உண்மையே!

தொழில்துறை வளர்ச்சி என்ற பெயரில், சுற்றுச் சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசு, தொழிற்சாலைகளின் கழிவு நீர், கடலில் கொட்டும் விஷக் கழிவுகள் போன்றவைகளால் கடலூர் மாவட்டம் மட்டுமல்ல கடலோர மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வே கேள்விக் குறியாகிப் போயுள்ளது. தலைமுறை தலைமுறையாக நோய்களின் பிடியில் சிக்கி சீரழியும் சூழல் உருவாகி உள்ளது. களத்தில் இறங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு சமூக ஆர்வலர்களிடமும், அமைப்புகளிடமும் இருக்கிறது. இல்லையென்றால் விளைவு மிக மோசமாக இருக்கும். வரலாறு நம்மை தூற்றும்.

THANKS : - சமுகநீதி அறகட்டளை

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி