"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 செப்டம்பர் 2011

பாஸ்ப் போர்ட் மோசடி தமிழ் நாட்டு சார்ந்த வாலிபர் கைது ...

0 comments

மதியச்சென்னையில். பாஸ்போர்ட்டில் இருந்த புகைபடத்தை எடுத்துவிட்டு தன் புகைப்படத்தை ஒட்டி போலி பாஸ்போர்ட் தயார் செய்து பயன்படுத்தி வந்தவரை சென்னை விமான நிலைய போலிஸ் அதிகாரி கைது செய்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் முகம்மது அப்பாஸ்,வயது 30. வாகன ஓட்டுனரான இவருக்கு, 2009 யில் சவுதி அரேபியாவில் வேலை கிடைத்தது. ஆனால், அவரின் பாஸ்போர்ட், ஒரு விபத்தில் நெருப்பில் கருகி போனதால் அதைவைத்து, விசா கிடைக்க வில்லை இந்நிலையில் பாஸ்போர்ட் பெற்று தரும் ஏஜன்ட் அவரிடம் கேட்டபோது, யாராவது ஒருவரின் பாஸ்போர்ட்டை கொண்டு வந்தால், அதை மாற்றி தருவதாக ஏஜன்ட் கூறினார்.

அதன் படி தன் மைத்துனர் சம்சுதீன், வயது:32, என்பவரின் பாஸ்போர்டையும் தன் புகைப்படத்தையும் ஏஜன்ட்டிடம் கொடுத்தார். அடுத்த சில நாட்களில், சம்சுதீன் கையில் மாற்றியமைக்கப்பட்ட பாஸ்போர்ட் கொடுத்தார். இதை பயன்படுத்தி, ஓட்டுனர் விசா பெற்ற அப்பாஸ், மூன்று ஆண்டுகளுக்கு முன், சவுதி அரேபியா சென்று, வேலையில் சேர்ந்தார். இடையில், இரண்டு முறை அதே பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இந்தியாவிற்கு வந்தும் சென்றுக்கிறார்.
சில நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு வந்த அப்பாஸ், விடுமுறையை நாட்களை முடித்துக் கொண்டு, நேற்று அதிகாலை

3 மணிக்கு மேல் புறப்பட இருந்த, கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் மீண்டும் சவுதி அரேபியா போவதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் {இமிகிரேசன் செக்} எனப்படும் சோதனையின் போது, முகம்மது அப்பாசின், பாஸ்போர்ட் போலியானது என்பதை கண்டறிந்து அவரை மடக்கிய குடியுரிமை அதிகாரிகள், அவரை விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், காவல்துறையினர் அவரை கைது செய்து, விசாரணை மேற்க்குக் கொண்டு வருகின்றனர்.



ஆக்கம் : அதிரை fact

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி