அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிரை பேரூராட்சி மன்றத் தலைவராக அனைத்து சங்கங்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளியில் மதிப்பிற்குரிய அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்களது தலைமையில் நமதூரின் அனைத்து முஹல்லாக்களையும் சேர்ந்த 7 சங்க நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம், கடற்கரைத் தெரு ஜமாஅத், தரகர் தெரு ஜமாஅத், புதுத் தெரு ஜமாஅத், கீழத் தெரு ஜமாஅத், நெசவு தெரு ஜமாஅத் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு சங்கம் / ஜமாஅத்திலிருந்தும் தலா 5 நபர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
ஆலிம்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும் இந்த முயற்சிக்கு அனைத்து அதிரைவாசிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரைfact இணையத்தலமும் கேட்டுக் கொள்கிறது.
பதிப்பு : அதிரை எக்ஸ்பிரஸ்