"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 செப்டம்பர் 2011

அரசியல் வாதிகளுக்கு பணம்கொடுக்கும் கும்பலே..!காந்தி கணக்கில் எழுதிக்கோ ..!

0 comments

கண்னீர் இல்லாத வாழ்க்கை கூட சிலருக்கு அமைந்துவிடுகிறது. ஆனால், கடன் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் அமையுமா என்பது சந்தேகம்தான்.

நமது ஊரிலுள்ள பெரும்பாலான பெட்டிக்கடைகளில் “கடன் அன்பை முறிக்கும்” என்று எழுதிப் போட்டிருப்பார்கள். செய்து பீடி ஒரு கட்டு வாங்கிகொண்டு, அதையும் காந்தி கணக்கில எழுதிக்கோ என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுகிறவர்கள் அதைப் படித்துப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

“கடன் அன்பை முறிக்கும்” என்பது நமக்கு மட்டும்தான் பொருந்தும், ஊருக்குப் பொருந்தாது போல. நாம்தான் கடன் வாங்குவதற்குப் பயப்படுகிறோம், பதறுகிறோம்.

அவசரத்திற்கு ஒரு பத்தாயிரம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கிவிட்டு, அதை திருப்பிக் கட்டுவதற்குள் படாதபாடு படவேண்டி இருக்கிறது. கடன்காரன் கண்ணில் படுகிற பொழுதெல்லாம் ஏதாவது கதை சொல்லிச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. குடும்பத் தேவைக்காக வாங்குவதுதான்.

ஆனால்-?

நம்மளிடம் பணம் இல்லாவிட்டாலும். எப்படி யாவது யாருடைய காலையாவது பிடித்து.

அரசியலில் சம்பாரிக்க திட்டம் இடும்,சமுதாய தொ(து)ண்டு மக்களின் நலனை கருதியா ?

வரும் உள்ளாட்சி தேர்தலில் நீக்கிரார்கள்.

நிச்சயமாக இல்லவே இல்லை.

அரசியலில் பணம் போட்டு பணத்தை சாமபாரிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இவர்களுக்கா உங்கள் ஓட்டு.

உங்கள் ஓட்டுகளை வீண் அடித்துவிட வேண்டாம்.

சரியான சவுக்கடி கொடுத்தால்தான் மட்டும் மரத்துப் போன இந்த அரசியல்வாதிகளுக்கு உறைக்கும் ?

முதல்லே ஊருக்கு ஒரு தலைமையேயை தேர்ந்து எடுங்கள்.

பிறகு ஊர் மக்களாகிய நிங்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் உங்களுக்காக உழைக்க ௬டியவராக இருப்பின் அவருக்கு வாக்களிங்கள்.

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடியுங்கள்

நல்லதை நினையுங்கள்.நலதை நடக்கும்

நல்லது நடக்க பொதும் அல்லாஹுக்கு சஜ்தா செய்துக் கொள்ளுங்கள்.

இன்ஷால்லாஹ் ...

ஆக்கம் :MST. சிராஜுதீன்



Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி