"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 அக்டோபர் 2011

நல்லா யோசிங்க...?

0 comments

ர்வாதிகார நாடுகளில் மக்களுக்கில்லாத அறிய வாய்ப்பு ஜனநாயக இந்திய குடிமக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளையும் ஆட்சி பீடத்தில் அமரும் கட்சிகளை நிர்ணயிக்கும் தலையாய கடமை வழங்கப்பட்டுள்ளது .

அந்த பொன்னான வாய்ப்பினை மக்கள் நழுவ விட கூடாது ஓட்டு சாவடி நோக்கி வீறு நடை போடுமுன் தங்கள் வோட்டினை எந்த அடிப்படையில் பதிவு செய்ய போகிறோம் என்று சற்று சிந்திக்க வேண்டும் .
  • தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் கடந்த கால வரலாறு தேர்தல் நேரத்தில் அவைகள் எடுத்த நிலைப்பாடு .
  • அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் காப்பாற்ற படுகிறதா?
  • அனைத்து சமூகத்தினருக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு பிரதி நிதி துவம் வழங்கபடுகிறதா ?
  • மக்கள் நலப் பணி எந்த அளவிற்கு சாதாரண மக்களை போய் சேர்ந்தது?
  • சமூதாய ஒற்றுமை ஓங்கி அமைதி பூங்காவாக எந்த ஆட்சி காலத்தில் இருந்தது?
  • தொழில் வளர்ச்சி பெற்று விலைவாசி எந்த ஆட்சியில் மக்களை வாங்கும் திறனுக்குட்பட்டிருந்தது?
  • எந்த ஆட்சியில் தமிழக நலன் காக்கப்பட்டிருந்தது?
மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களில் எந்த கட்சி சிறப்பாக செயல்பட்டது என்று சீர்தூக்கி சிந்தித்து வாக்களர் ஓட்டளிக்க வேண்டும் முஸ்லீம் சமூதாய மக்கள் ஓட்டு சாவடிக்கு செல்லும் முன்பு சற்றே யோசிக்க வேண்டும் அது என்ன?
  • எந்த பிரதான கட்சி மத வெறியில்லாத கட்சி ?
  • எந்த பிரதான கட்சி பாபர் மஸ்ஜித் இறை இல்லம் மற்றும் புராதான சின்னங்களை இடித்து தள்ள தன் தொண்டர்களை அனுப்பியது ?
  • எந்த பிரதான கட்சி இஸ்லாமியர்களுக்குகல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு தரக்கூடாது என்றது?
  • எந்த பிரதான கட்சி ஆட்ச்சியில் ஒரு முஸ்லீம் கூட மந்திரியாக அங்கம் வகிக்க வில்லை ?
  • எந்த பிரதான கட்சி ஆட்சியில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு முக்கிய இலாகா பொறுப்புகள் வழங்கப்பட்டன ?
  • எந்த பிரதான கட்சி ஆட்சியில் முஸ்லிம்கள் தொழில் வளர்ச்சி பெற வழிவகுத்தது?
  • எந்த பிரதான கட்சி ஆட்சியில்முஸ்லிம்கள் கருவாட்டு வியாபாரிகள் என ஏளனம் பேசப்பட்டது ?
  • எந்த பிரதான கட்சி ஆட்சியில் முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சமுதாய பிரச்சனைகளுக்கு சுலபமாக காரியம் சாதிக்க முடிந்தது?
  • எந்த பிரதான கட்சி ஆட்சியில் இமாம்கள் உலமாக்களுக்கு ஓய்வுதியம் வழங்கப்பட்டது?
  • எந்த பிரதான கட்சி ஆட்சியில் முஸ்லிம் கல்வி நிலையங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டது?
மேற்கூறிய முஸ்லிம் மக்களுக்கு பாதகமான காரியங்களில் ஈடுப்பட்டகட்சிகளுக்கு நிச்சயமாக வாக்களிக்க கூடாது தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களுக்கு அள்ளி வீசும் வாக்குறுதிகளுக்கு மயங்காதும் தூக்கி வீசும் எலும்புத் துண்டுகள் போன்ற பணத்தினுக்கும் மதி மயங்கவும் கூடாது
சமுதாய நலனுக்கும் ஊரின் நன்மைக்கும் எந்த கட்சி சிறந்தது என்ற முடிவெடுப்பதே சரியாகும்.

-அபு ஹஃபிலா
thanks :adiraixpress

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி