ஜித்தாவில் தமிழ் மணம் கவிழும் பல நிகழ்ச்சிகள் வரும் 20 ம் தேதி நடத்தப்பட உள்ளது.
சவூதி அரேபியாவி்ல் உள்ள ஜித்தாவில் ஷரபியா நகரில் உள்ள இம்பாலா உணவகத்தில் வரும் 20 ம் தேதி, வெளிநாட்டு வாழ் தமிழர்களை மகிழ்விக்கும் வகையில் சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் சமுதாய மற்றும் கல்வியறிவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆண்களுக்கு அனுமதி இல்லை.
அக்டோபர் 20 ம் தேதி மாலை 6 முதல் 10 மணி வரை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.
இதன் முதல் நிகழ்ச்சியாக, கோடை விடுமுறை கொண்டாட்டமா? திண்டாட்டமா? என்ற பெயரில் ஜெத்தா மகளிர் பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
அதன்பின் தமிழ் வார்த்தைகளில் வித்தகர்களாக உள்ளவர்கள் கலந்து கொள்ளும் ‘ஒரு சொல் ஒரு லட்சம்’ என்ற நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னர் வீட்டில் பயனற்றவை என குப்பையில் எறியும் பொருட்களை கொண்டு, பயனுள்ளவற்றை தயாரிப்பது குறித்து, ‘பயனற்றவைகளின் பயன்கள்’ நடக்க உள்ளது.
சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியான இதற்கு தேவையான பொருட்களை போட்டியில் கலந்து கொள்பவர்களே கொண்டு வர வேண்டும்.
அதன்பின் மகளிர் மட்டும் கலந்து கொள்ளும் வினோத போட்டியான ‘அட்டைப் பலகையில் பந்து விளையாட்டு’ நடைபெறும். மேலும் சிறுவர், சிறுமிகளின் கலைத் திறனை வெளிகொண்டு வரும் வகையில், வரைகலை மற்றும் வண்ணத்தீட்டல்கள் என்ற போட்டியும் இறுதியாக நடைபெறும்.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு, இறுதியாக பரிசு வழங்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களை ஹேட்டலுக்கு கொண்டு வந்து விட்டு, முடியும் போது ஆண்கள் வந்து அழைத்து செல்லலாம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் குழந்தைகள் மற்றும் சகோதரிகள் தங்கள் திறன்களை வளர்த்து கொள்ளலாம்.
நிகழ்ச்சிக்கான அனுமதி டிக்கெட்கள் இருந்ததால் மட்டுமே அனுமதி உண்டு. இது குறித்த மேலும் விவரங்களுக்கு, தில்ஷாத் அக்பர் பாட்ஷா – 617 8246, மும்தாஜ் சீனி அலி- 674 4785 மற்றும் நஜ்மா ஜின்னா -631 2285 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.