அஜ்மான் இபின் சினா மருத்துவ மையம், அஜ்மான் சுகாதார அமைச்சகத்தின், தனியார் மருத்துவ உரிம துறையுடன் இணைந்து அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்களில் சர்வதேச மருத்துவ மாநாட்டை நடத்தவுள்ளது.
அஜ்மான் பல்கலைக்கழக, ஷேக் ஜாயத் மருத்துவ அரங்கில் நடைபெறும் இந்த மாநாடு, இபின் சினா நடத்தும் 7வது மாநாடாகும்.
மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாநாடு தனித் தனியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலும், இங்கிலாந்திலிருந்தும் பலர் கலந்து கொண்டு இதில் சிறப்புரையாற்றவுள்ளனர்.
இதுதொடர்பான மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள…
ஷேக் முகம்மது அலி
பொது மேலாளர்,
ஆலியா சுகாதாரக் கழகம்,
web:www.ibinsinahospital.ae
தொலைபேசி 050/5300187