"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
17 அக்டோபர் 2011

முத்துப்பேட்டையில் ஓட்டு போடா வந்த பெண்ணை போலிஸ் தள்ளிவிட்டதால் பரபரப்பு!

0 comments



முத்துப்பேட்டை, அக்டோபர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் விறுவிறுப்பாக மக்கள் வாக்கு அளித்தனர், இந்த நிலையில் பெரிய கடைதெருவில் உள்ள ஆவ, நேனா பள்ளியில் பேரூராட்சிக்குட்பட்ட 6 ,7 ,8 , 9 ஆகிய வார்டுகளுக்கு வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தனர்.

அப்பொழுது மரைகாயர் தெருவை சேர்ந்த முஹம்மத் அஜீஸ் மனைவி ஷகீலா பானு (27) தனது அண்ணன் மனைவியான முஹம்மத் ஃபாத்திமா உடன் வந்த அவர் ஷகீலா பானு ஓட்டு போட்டுவிட்டு தனது அண்ணன் மனைவி முஹம்மத் ஃ பாதிமாவிர்காக பின் பக்க வாசலில் நின்று கொண்டிருந்தார்,

அப்போது அந்த வாக்கு சாவடியில் பாதுகாப்பில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஷகீலா பானுவை தரைக்குறைவாக திட்டி அவமதித்து தள்ளி விட்டு கதவை சாத்தியதாக தெருகிறது.

இதனால் கூட்டத்திற்கு மத்தியில் தன்னை கேவலப்படுத்தி விட்டாரே என்று கண்கலங்கி சிறப்பு
சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்கு சாவடி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கூடி ஷகீலா பாணுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் செந்தில் நாதன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், வருவாய் ஆய்வாளர் கிருஸ்ணகுமார், கிராம நிர்வாக அதிகாரி தியாகராஜன், ஆகியோர் வாக்காளர் ஷகிலா பானு மற்றும் அவரது சகோதரர் முகைதீன் பிச்சை ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஷகீலா பானு சம்பந்தப்பட்ட போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தார், பின்னர் வட்டாட்சியர் சம்பத்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று இதற்காக வர்த்தம் தெருவித்து கொள்கிறேன் என்று கூறியதால் ஷகீலா பானு திரும்பி சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொகுப்பு :- இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி