அரசியல் வாதிகளுக்கு பணம்கொடுக்கும் கும்பலே..!காந்தி கணக்கில் எழுதிக்கோ ..!
கண்னீர் இல்லாத வாழ்க்கை கூட சிலருக்கு அமைந்துவிடுகிறது. ஆனால், கடன் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் அமையுமா என்பது சந்தேகம்தான்.
நமது ஊரிலுள்ள பெரும்பாலான பெட்டிக்கடைகளில் “கடன் அன்பை முறிக்கும்” என்று எழுதிப் போட்டிருப்பார்கள். செய்து பீடி ஒரு கட்டு வாங்கிகொண்டு, அதையும் காந்தி கணக்கில எழுதிக்கோ என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுகிறவர்கள் அதைப் படித்துப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.
“கடன் அன்பை முறிக்கும்” என்பது நமக்கு மட்டும்தான் பொருந்தும், ஊருக்குப் பொருந்தாது போல. நாம்தான் கடன் வாங்குவதற்குப் பயப்படுகிறோம், பதறுகிறோம்.
அவசரத்திற்கு ஒரு பத்தாயிரம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கிவிட்டு, அதை திருப்பிக் கட்டுவதற்குள் படாதபாடு படவேண்டி இருக்கிறது. கடன்காரன் கண்ணில் படுகிற பொழுதெல்லாம் ஏதாவது கதை சொல்லிச் சமாளிக்க வேண்டியிருக்கிறது.குடும்பத் தேவைக்காக வாங்குவதுதான்.
ஆனால்-?
நம்மளிடம் பணம் இல்லாவிட்டாலும். எப்படி யாவது யாருடைய காலையாவது பிடித்து.
அரசியலில் சம்பாரிக்க திட்டம் இடும்,சமுதாய தொ(து)ண்டு மக்களின் நலனை கருதியா ?
வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்கவா நீக்கிரார்கள்.
இவர்களுக்கா உங்கள் ஓட்டு.
உங்கள் ஓட்டுகளை வீண் அடித்துவிட வேண்டாம்.
சரியான முடிவு எடுத்தால் தான் மட்டும் மரத்துப் போன இந்த அரசியல்வாதிகளுக்கு உறைக்கும் ?
ஊர் மக்களாகிய நிங்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் உங்களுக்காக உழைக்க ௬டியவராக இருப்பின் அவருக்கு வாக்களிங்கள்.
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடியுங்கள்நல்லதை நினையுங்கள்.நலதை நடக்கும்
நல்லது நடக்க பொதும் அல்லாஹுக்கு சஜ்தா செய்துக் கொள்ளுங்கள்.
இன்ஷால்லாஹ் ...
ஆக்கம் :MST. சிராஜுதீன்