"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 நவம்பர் 2011

மறதி நல்லது . . !

0 comments



அஸ்ஸலாமு அலைக்கும்,



முட்டி நிற்கும் சினத்தால்;
குட்டிப் போட்டு நிற்கும்
வியர்வைத் துளிகள்
மேனியில்!
பெரும் விசயத்தைத்
தொலைத்து;
தொலைத்த விசயத்தைத்
தேடிக் களைத்து;
எனைத் திட்டித் தீர்க்கும்
மனிதக்கூட்டம்!

மறந்துவிட்டார்கள்
மறதி எனை;
சின்னச் சின்னக் கசப்புகளுக்கு
நான்தான் கசாயம் என்று!

மனிதனுக்கு
நினைவு மட்டுமே
நினைவில் நின்றால்;
வெறுப்பிற்கு இடம் போட்டு;
சண்டையிட்ட உறவுகளுக்கு
இடமில்லாமல் இருந்திருக்கும்
இதயத்தில்!

ஒத்துக்கொண்டு;
ஒதுக்குங்கள் இதயத்தின்
ஓரத்தில் சின்ன சின்ன
மறதி நல்லதென்று!

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி