அல் அமீன் பள்ளி நிர்வாகிகளின் சார்பாக நேற்று ( 06/02/2012 ) மஹ்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற கூட்டத்தில், "அக்பர் ஹாஜியார் " அவர்களின் தலைமையில் ஒரு குழுவினர் நியமிக்கப் பட்டது.
இக்குழு நமது அல் அமீன் பள்ளி சம்பந்தமாக ( 07/02/2012 ) அன்று அஸர் தொழுகைப்பின் நமதூர் பேரூராட்சி தலைவர் S. H. அஸ்லாம் அவர்களை அவர்களின் வீட்டில் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அன்றய கூட்டத்தில் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
அதன்படி( 07/02/2012 ) அஸர் தொழுகைப்பின் நமதூர் பேரூராட்சி தலைவர் S. H.அஸ்லாம் அவர்களை அவர்களின் வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்த குழுவினர்கள் நமது அல் அமீன் பள்ளி பிரச்சனை சம்பந்தமாக அவர்களின் ஆதரவை கோரினார்கள். அவர்களும் " இது நமது பள்ளி, நாம் ஒற்றுமையாக இருந்து அனைவர்களும் ஒன்றாக செயல்படுவோம்" என்று அவர்களின் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக குழுவினர்கள் சார்பாக அனைத்து கவுன்சிலர்களையும் சந்தித்து ஆதரவு கோருவது என தீர்மானிக்கப்பட்டது.
விரைவில் சுமூகமான முடிவு ஏற்பட்டு அல்லாஹ்வின் பள்ளி கட்டி முடிக்கப் பட வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
thanks : adiraiexpress