இறைத்தந்த அருள்மறையுண்டு;
அதில் அருமருந்து உண்டு;
இறை நபி வழிமுறைக்கொண்டு;
வாழ்விற்கு அழகான நெறிமுறையுண்டு!
வன்மைக்கொண்ட உள்ளமும்
மென்மைக் கொண்டுச் சூழும்;
வெண்மைக் கொடிப்பூக்கும்;
இஸ்லாம் என்றால் மணக்கும்!
கறை மிகுந்தச் சிந்தைக்கு;
திரையிட்டுத் தடையிட்ட மார்க்கம்
தீவிரவாதத்தைத் திறந்திடுமா;
தீவிரமாய் நீ சிந்திக்க வேண்டாமா!
கருணைப் பொழிவதை நன்மை
கணக்கில் சேர்க்கும் சத்தியமார்க்கம்
முரணாகுமா - இல்லை
மனிதக்குலத்திற்கு அரணாகுமா;
இவை உனக்கு புரிந்திட வேண்டாமா!
ஆக்கம் :- யாசர் அரஃபாத்