என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் திருப்பூரில் என்கவுண்டர் நடத்தமாட்டோம் காவல்துறை அறிவிப்பு எங்க அப்பன் குதிறிக்குல்இல்லை என்பதுதான் நினைவுக்குவருகிறது ஜெயலலிதாவின் பிரதமர் கனவில்மண்ணை அள்ளிபோட்ட சென்னைகாவல்துறை அதிகாரிகள் சென்னைசம்பவதை பீகார்முதல்வர் நிதிஷ்குமார் கையில் எடுத்துயிருபபதால் மோடியின் நட்பை பிரதமர்ஆசையால் வளர்த்து மறுபுறம் முஸ்லிம்களின் நட்பையும் வளர்த்துவந்தார் காவல்துறையினருக்கு கட்டுங்கடங்கா அதிகாரமும் சுதந்திரமும் கொடுத்ததன் விளைவு அவர்க்கே ஆபத்தை ஏற்படுத்திவிட்டனர்
வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கருதி 5 பேர் சென்னை மாநகர காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி தாக்கல் செய்துள்ளார்
சென்னையில் நடந்த என்கவுன்டரில் வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என சென்னை போலீசார் கூறினர். இந்நிலையில் இந்த என்கவுன்டர் குறித்து பேட்டியளித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சென்னை என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக சென்னை போலீசார் வெளியிட்ட பட்டியல் தவறானது. கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சிலர் உயிருடன் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து தகவலல்ளை சேகரித்தும், விசாரணை நடத்தியும் வருகிறோம் என கூறினார்.