அரியானா மாநிலம், மகேந்தர்கார் மாவட்டம் கெர்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார், 32. ஐந்து வயதில் இவருக்கு ஏற்பட்ட வயிற்றுப்போக்கின் காரணமாக, இவரது இரண்டு விழிகளும் பார்வைத் திறனை இழந்தன.
இதனால், இவர் வழக்கமான பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தார். உள்ளூர் சாமியார் ஒருவரின் வற்புறுத்தலால், டில்லியில் உள்ள விழியிழந்தோர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற அஜித்குமார்,ஐ.ஏ.எஸ்.,அதிகாரி பயிற்சிக்காக உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்கு நாளை மறுநாள் பயணமாகிறார்.