ALT_IMG

ADIRAI FACT

WELCOME TO ADIRAI FACT.COMReadmore...

"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
22 செப்டம்பர் 2016

ஜப்பானில் நிலநடுக்கம்!!!!!

0 comments

ஜப்பானில் கட்சூரா பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவிலிருந்து 395 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் வந்துள்ளது.மக்கள் அனைவர்க்கும் அதிர்ச்சி ஏற்ப்பட்டது.

Continue reading →
21 செப்டம்பர் 2016

பாகிஸ்தானை அழைக்காதது ஏன்? நிருபரிடம் கபில்தேவ் ஆத்திரம்!!

0 comments

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் உலக கோப்பை கபடி போட்டி நடைபெற உள்ளது. இதில்  இந்தியா, தென்கொரியா, வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனூப்குமார் தலைமையிலான 14பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கான சீருடையை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கபில்தேவ் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கபில்தேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, நிருபர் ஒருவர், உலக கோப்பை கபடி போட்டியில் பாகிஸ்தான் அணி ஏன் அழைக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என கேட்டார். அதற்கு, நீங்கள் இந்தியர் என்றால் இந்த கேள்வியை கேட்காதீர்கள் என கபில் பதில் அளித்தார். அப்போது அந்த நிருபர், தற்போது இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய ஒன்று தான் என கூறினார்.

இதற்கு கபில்தேவ், காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேரை இழந்துள்ளோம், என்றார்.  அந்த நாடு பங்கேற்பது போன்ற சில விஷயங்கள் குறித்து அரசு தான் முடிவு செய்யவேண்டும். வீரர்களாகிய நாங்கள் நாட்டிற்கு கடமை செய்ய வேண்டிய நிலையில், குளத்தில் குதிக்க வேண்டும் என்றால் உடனடியாக குதிக்க தயாராக இருக்க வேண்டும். 12 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கபடி போட்டியில் இந்தியாவும் ஒன்று. இதில் இந்தியா நன்கு விளையாடு என்றனர்.

Continue reading →
20 செப்டம்பர் 2016

ராம்குமார் பிரேத பரிசோதனை செய்ய மீண்டும் உயர்நீதிமன்றம் தடை

0 comments

ராம்குமார் பிரேத பரிசோதனைக்கு உயர்நீதிமன்றம் தொடர்ந்து தடை விதித்துள்ளது. ராம்குமார் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடற்கூறுக்கு தடைவிதித்தனர். ஏற்கனவே 4 அரசு மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 5-வதாக தனியார் மருத்துவர் ஒருவரை உடற்கூறு ஆய்வுக்கு நியமிக்க பரமசிவம் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிபதிகள் ரமேஷ், வைத்தியநாதன் அமர்வு வழக்கை விசாரித்தது. தனியார் மருத்துவர் நியமிக்கலாம் என்ற நீதிபதி ரமேஷ் கருத்தை மற்றொரு நீதிபதி ஏற்கவில்லை. இதனால் 3-வதாக ஒரு நீதிபதியை நியமித்து முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. இறுதிமுடிவு வரும் வரை ராம்குமார் உடற்கூறு ஆய்வுக்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர். புழல் சிறையில் இறந்த ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

Continue reading →
18 செப்டம்பர் 2016

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை!!!

0 comments

சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். இன்று அவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்  கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி  செய்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் , அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் 24-ம் தேதி சுவாதி என்பவர் கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை வழக்கில் ஜூலை 1-ம் தேதி நெல்லையில் ராம்குமார்  கைது செய்யப்பட்டார்.

தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Continue reading →

IAS,IPS முதன்மைத் தேர்வு பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு

0 comments




IAS, IPS Free coaching by Tamilnadu Govt
ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்:
தமிழக அரசு அறிவிப்பு

ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
 முதன்மைத் தேர்வுக்கான மாணவ-மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. குமாராசாமி ராஜா சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கப்பட்ட பிறகு, சேர்க்கை நடைபெறும். முதன்மைத் தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 225 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்த பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ-மாணவியர்களும் எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

பயிற்சி வகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் தொடங்கி, முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் கட்டணம் இல்லாத விடுதி வசதி உண்டு. 

இந்தப் பயிற்சிக் காலத்தில் மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, முதல்வர், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், சென்னை-28 என்ற முகவரியிலும், 044-24261475 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


Continue reading →
17 செப்டம்பர் 2016

பேரித்தம்பழம் மகத்துவம்!!!

0 comments

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? 

பலரும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் பேரீச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 3 பேரீச்சம் பழத்தை ஒருவர் உட்கொண்டு வந்தால், தற்போது பலர் சந்தித்து வரும் நிறைய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். 

அந்த அளவில் இந்த சிறு பழத்தில் சத்துக்களானது ஏராளமான அளவில் அடங்கியுள்ளது. இங்கு தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். 

பேரீச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்னைகள் இருப்பின், தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்னைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கும்.

பேரீச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோய் எதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைப்பதாக கூறுகின்றன. பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும். 

மேலும் இதில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக பேரீச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஏழு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தினமும் ஒருவர் 100 மிகி மக்னீசியத்தை எடுக்க வேண்டியது அவசியம். யார் ஒருவர் தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும். பேரீச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, ரத்த சோகை வரும் அபாயத்தை குறைக்கும். எனவே உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு
Continue reading →

அதிரை ஈத் மிலன் நான்காம் ஆண்டு நடத்தும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!!!!!

0 comments

தியாகத் திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாய சகத்தோர்களுடன்
பகிர்ந்துகொள்ளும் சமூக நல்லிணக்க விழா.

நாள் :18-09-2016, காலை 10 மணிக்கு

இடம் : பவித்ரா திருமணம் மண்டபம், அதிராம்பட்டினம்

இந்த நிகழ்ச்சியில் பரிசளிப்பு நடைபெரும்.சமுதாய நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தருமாறு அன்புடன் ஈத் கமிட்டி சார்பில் அழைக்கிறோம்.

Continue reading →

வெளிநாட்டு வாழ்கை

0 comments
விடைக்கொடுத்து ஊருக்கு வருகிறென்

இறுகிப்போன இமையும்
பாரத்தை இறக்கிவைத்து,
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு,
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக,
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு,
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி,
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை
முடிச்சுப் போட்டுக்கொண்டு
கட்டவிழ்க்க வருகிறேன்,
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்,
உன்னைத்தேடி வருகிறேன்
Continue reading →
12 மே 2013

சவூதி வெளிநாட்டுத் தொழிலாளருக்கு பொது மன்னிப்பு

0 comments

சவூதி அரேபிய அரசு நித்தாகத் என்னும் தேசிய திட்டத்தின்படி சட்டத்திட்டங்களுக்கு உட்படாத, காலநீட்டிப்பாய் தங்கியுள்ள வெளிநாட்டவரைப் பிடித்து வெளியேற்றி வந்தது.
இதனால் வெளிநாட்டுப் பணியாளர் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், சட்ட முறைமைகளின் கீழ் வராத அயல்நாட்டுப் பணியாளர்கள் உடனடியாக தங்கள் குடியுரிமைகளையும், பணி உரிமங்களையும் சரிசெய்துகொள்ள சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் மூன்றுமாதங்கள் சலுகை அளித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் ஊழியர்நலத்துறையும், உள்துறையும் இணைந்து நேற்று எடுத்த முடிவின்படி குடியுரிமை அட்டை, பணி உரிமம் ஆகியவற்றில் சட்ட மீறல் செய்துள்ள அனைத்து வெளிநாட்டுப் பணியாளருக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 6, 2013 க்கு முன்பு  சட்ட மீறல்கள் செய்தவர்களுக்கு இந்த மன்னிப்புப் பொருந்தும் என்றும், அந்த நாளுக்குப் பிறகான மீறல்கள் யாவும் குற்றமாகவே கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை காலாவதியானவர்களும், ஸ்பான்சர் எனப்படும் (சவூதி) பொறுப்பாளரிடமிருந்து ஓடித் தப்பியவர்களுக்கும் இந்தப் பொதுமன்னிப்பு பொருந்தும் என்றும், அவர்கள் உடனடியாக, தங்கள் குடியுரிமை நிலையை சரிசெய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ்ஜூ, உம்ரா வழியே சவூதியில் நுழைவு பெற்று ஆங்காங்கே பணியில் சட்ட அனுமதியின்றி அமர்ந்திருப்பவர்களுக்கும், ஜூலை 3, 2008க்கு முன்பு நுழைவு பெற்றவர்களாக இருந்தால்,பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளரின் குடியுரிமை அட்டைகளை புதுப்பித்தல், தன் வணிக உரிமங்களைப் புதுப்பித்தல் ஆகியவை சவூதி பொறுப்பாளரின் கடமையே ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி அல்லது நிறுவனம் மாற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு பொறுப்பாளர்கள் (கஃபீல்) அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சலுகைக் காலத்திற்குள் இந்த குடியுரிமை அட்டைகளையும், பணி உரிமங்களையும் சரி செய்துகொள்ள வேண்டும் என்றும், மீறுபவர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும் என்று அமைச்சகங்களின் அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue reading →
24 ஏப்ரல் 2012

குடும்பக்”கொல்லி”யை ஊரைவிட்டு(த்) துரத்த....

0 comments
தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்று சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மனித நேயத்தை வளர்க்க மஸ்ஜித்கள், சமுதாய சேவைகளுக்கென்று இஸ்லாமிய அமைப்புகள், பைத்துல்மால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் அமையப்பெற்ற ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஓன்று இவ்வூரில் பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டுருக்கிற ஊரில்.........”மதுக்கடைகள்” !

இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில்
அழைத்துச் சென்றுவிடும்.

இடம் : பட்டுக்கோட்டை ரோடு ( பாத்திமா நகர் அருகே )

மதுக்கடை + கூடம்” ஜருராகத் தயாராகிறது நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனை எனும் சிறப்பைப் பெறுகிற “ஷிஃபா” அருகே............
மேலும் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிற சாலைப்பகுதி, அதிரை மின்சார வாரியம், இன்டேன் காஸ் நிறுவனம் போன்றவை அமைந்துள்ளப் பரபரப்பானப் பகுதியின் அருகே...........


இடம் : E.C.R சாலை ( பெரிய ஏரி அருகில் )
ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 60 வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய இரு வழிச்சாலைப்பகுதி E.C.R. இச்சாலையில் நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் சிலர் அதிகாலைப்பொழுதிலும் வேறுசிலரோ மாலை நேரங்களிலும் “வாக்கிங்” “சைக்கிளிங்”,”ஜாக்கிங்” போன்றவற்றை செய்வதுண்டு.
மேலும் இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் இவ்வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய “மதுக்கடை”

சமீபத்தில்தான் மதுவின் பாதிப்புகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி “குடிக்காதே”எனும் தலைப்பிட்டு விழிப்புணர்வைத் தூண்டும் விதமாகக் கட்டுரை ஓன்றைப் பதிந்த எனக்கே இக்கூடங்களைக் கண்டதும் மிகவும் மன வேதனையடையச் செய்ததே...............!

அப்போ உங்களுக்கு எப்படி இருக்கும் ?


நமதூர் பிரபல அரசியல் கட்சிகளே !
சமுதாய அமைப்புகளே !!
இயக்கவாதிகளே !!!
தொண்டு நிறுவனங்களே !!!!
சமூக ஆர்வலர்களே !!!!!
மாணவ, மாணவிகளே !!!!!!
பொதுமக்களே !!!!!!!

எழுந்துருங்கள் ! தயாராகுங்கள் !! புறப்படுங்கள் !!! இதுபோன்ற குடும்பக்கொல்லியை ஊரைவிட்டு துரத்துவதற்கென்றே.................

சேக்கனா M. நிஜாம்

இறைவன் நாடினால் ! தொடரும்......................
Continue reading →
23 ஏப்ரல் 2012

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒத்துவரக் கூடிய மற்றும் ஒத்துவராத உணவு வகைகள்

0 comments
நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகின்றது. அந்த ஏழு ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள் எண்ணெய் மற்றும் தண்ணீராகும்.
விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை வழங்குகின்றன. மேலும் நாம் உண்கின்ற உணவு சரியாக பயன்படவும் உதவுகின்றன. உதாரணமாக விட்டமின் அ, ஆ காம்ளக்ஸ் விட்டமின் மற்றும் விட்டமின் ஈ ஆகியவற்றைச் சொல்லலாம்.
தாதுக்கள்: தாதுக்கள் எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, தசை இயக்கம், நரம்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. நம் உடம்பிற்கு பயன்படும் தாதுக்களுக்கு உதாரணமாக கால்சியம், பொட்டாசியம், மக்னீஷியம் மற்றும் குரோமியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்: இந்த ஊட்டசத்து நம் உடம்பில் நிகழும் தேவையற்ற ஆக்ஸைடேஷனை தடுக்க உதவுகின்றது. இவற்றிற்கு உதாரணமாக விட்டமின் இ, விட்டமின் உ மற்றும் செலேனியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
நார் சத்து: இதே நார் சத்துக்கள் நம் உடம்பிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றது. உதாரணமாக சைலியம் பௌடர் , தவிடு ,மற்றும் பெக்டின் ஆகியவற்றை கூறலாம்.
என்சைம்கள்: நாம் உண்கின்ற உணவு செரிமானம் ஆவதற்கு இந்த என்சைம்கள்தான் உதவுகின்றன. நாம் உட்கொள்கின்ற மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து என்று இவற்றையெல்லாம் ஜீரணம் செய்வதற்கு இந்த என்சைம்கள் உதவுகின்றன.
எண்ணெய்: நம் உடம்பிலுள்ள திசுக்கள் மற்றும் மூட்டுகளுக்கெல்லாம் நல்ல இயக்கம் வருவதற்கும் உராய்வு ஏற்படாமல் இருப்பதற்கும் எண்ணெய் உதவுகின்றது. ஆலிவ் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெயை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற ஊட்டச் சத்துக்கள்
மேற்கூறியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது ஆரோக்கியமான உணவு வகைகள் மேற்சொன்ன ஊட்டச்சத்துக்களை எல்லாம் நமக்கு வழங்கக் கூடியதாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவு வகைகள் இந்த ஊட்டச் சத்துக்களை தராதவைகளாக இருக்கும்.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற மாவுச்சத்துக்கள்
பிரகாசமான நிறம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழவகைகள் மேற்கண்ட ஏழு ஊட்டச் சத்துக்கள் கொண்டு இருப்பதால் இவையும் ஆரோக்கியமான மாவுச்சத்துகள் என்று பெயர் பெறுகின்றன. பார்லி மற்றும் ஓட்ஸ் தானிய வகைகளும், விட்டமின் கள், தாதுக்கள், நார்ச்சத்து, எண்ணெய் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் இவையும் ஆரோக்கியம் உள்ள மாவுச் சத்துகளாக கருதப் படுகின்றன. செயற்கையாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் விட்டமின்கள், தாதுக்கள், என்ஸைம்கள் ஆகியவை இல்லாதிருப்பதால் ஆரோக்கியமற்ற மாவுச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மேலும் இந்த பதப்படுத்தப் பட்ட உணவுப் பண்டங்கள் நம்முடைய ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை வேகமாக ஏற்றுவதால், ஆரோக்கியமான உணவு என்ற தகுதியை இழக்கின்றன. இப்படித் தகுதி இழக்கும் உணவு பண்டங்களில் பாட்டில் செய்யப்பட்ட பழச்சாறுகள், உருளைக்கிழங்கு வறுவல்கள், வெள்ளை சாதம், வெள்ளை ரொட்டி, மற்றும் தக்காளி கெட்சப் ஆகியவை அடங்கும். இவையெல்லாம் நம் உடம்பிற்கு ஊட்டம் தருவதில்லை, பாதுகாப்பதில்லை, சுத்தப்படுத்துவதும் இல்லை.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற புரதச் சத்துக்கள்
கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், மீன் மற்றும் இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகள், சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இவை எல்லாம் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும் பாலானவற்றை கொண்டு இருப்பதால் ஆரோக்கியமான புரதச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. மேலும் ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்து இவைகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை என்பதும் ஒரு நல்ல விஷயமாகும். மேலை நாடுகளில் சோளம் சாப்பிட்டு வளரும் கால்நடைகளுக்கு நிறைய வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் அன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதால் இக்கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி ஆரோக்கியமற்ற புரதமாக கருதப்படுகின்றது. இந்தக் கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி புற்று நோயைத் தூண்டும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். ஆனால் புல் தின்று வளரும் கால்நடைகளுக்கு வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை என்பதால் அவைகளினுடைய இறைச்சி ஆரோக்கியமான புரதமாகக் கருதப்படு கின்றது.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள்
ஆலிவ் எண்ணெயிலுள்ள தனி கலப்பில்லாத கொழுப்புச் சத்து நம்முடைய ரத்தக் குழாய்கள் மற்றும் உடம்பிலுள்ள மூட்டுக்கள் ஆகியவற்றிற்கு நல்லதொரு உராய்வில்லாத இயக்கத்தை கொடுப்பதால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றது. மீன் எண்ணை மற்றும் வால்நட் கொட்டைகள் ஆகியவற்றில் காணப்படுகின்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் நம் உடம்பிற்கு மிகவும் தேவையான ஒமேகா 3 என்றழைக்கப்படும் அவசியமான கொழுப்பு அமிலத்தை கொண்டிருக்கின்றன. இவை நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் அடர்த்தி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் நல்ல கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றன.
மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள், பிராணிகளிடம் காணப்படும் சில ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள், ஒமேகா 6 )கொழுப்பு அமிலம் போன்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் ஆகியவை ஆரோக்கிய மற்ற கொழுப்புச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மார்ஜரின், உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் வறுவல் செய்யப்படுகின்ற பதார்த்தங்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகும். மேலும் பதப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் ஆயில் ஆகியவை இரண்டும் ஆரோக்கியமற்ற ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பருத்திக் கொட்டை எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவை ஆரோக்கிய மற்ற கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படு கின்றது. மேற்கூறிய ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள் எல்லாம் நம்முடம்பில் கொலஸ்ட்ராலை அதிகரித்து அதன் காரணமாக ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியன.
மேற்சொன்ன ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமற்ற என்ற இரு பிரிவுகளின் கீழ் நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளையும் பயனற்றது, பயனுள்ளது என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
பயனற்ற உணவு வகைகள்: பயனற்ற உணவு வகைகள் என்பவை நம் உடம்பை வியாதிக்கு உள்ளாக்கி நம்முடைய ஆயுளை குறைக்கக் கூடியவை. செயற்கையாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும். உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இவற்றில் இருக்காது. மேலும் இந்த பயனற்ற உணவுப் பண்டங்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடியவை.

பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
இந்தப் பண்டங்கள் நம்முடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. இவ்வுணவுப் பண்டங்கள் பெரும்பாலும் மிதமாக சமைக்கப்படுகின்றன என்பதால் நம்முடம்பிற்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச் சத்துக்கள் வீணாகாமல் காப்பாற்றப்படுகின்றன. இந்த உணவுப் பண்டங்கள் சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளிலிருந்து மீட்கக் கூடியவை.
ஐந்து பயனற்ற உணவுகள்:
ஐந்து பிரதான உணவுப் பண்டங்களை நாம் பயனற்ற உணவுகள் எனலாம். இவைகளை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் பொழுது இவை நம் உடம்பை பலஹீனப்படுத்தி புற்று நோய், சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாக்கிவிடுகின்றன. இந்த ஐந்து பிரதான உணவுப் பண்டங்கள் வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாவு, மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு, ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட கொழுப்பு மற்றும் நம் உடல் நலத்தைப் பாதிக்கும் கெமிக்கல்ஸ் ஆகும்.
1. வெள்ளை சர்க்கரை: இந்தப் பிரிவின் கீழ் கார்ன்சிரப், சுக்ரோஸ், மால்டோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை கலந்து செய்யப்பட்ட உணவுகள் எல்லாம் அடங்கும். மேலும், குளிர்பானங்கள், பாட்டிலில் போடப்படும் பழச்சாறுகள், ஜாம், மற்றும் கேக் வகைகளும் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கூறிய சர்க்கரை அதிகமான இந்தப் பண்டங்கள் எல்லாம் நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை உடனே அதிகப்படுத்தி அதன் விளைவாக இன்சுலின்களையும் நம் உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த சர்க்கரைமயமான உணவுப் பண்டங்களில் இருக்கின்ற கூடுதல் மாவுச் சத்து எல்லாம் உடம்பில் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. மேலும் இந்தச் சர்க்கரைமயமான உணவுப் பண்டங்கள் நம் உடம்பிலுள்ள பயனுள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்களை குறையச் செய்கின்றன. சர்க்கரைக்கு மாற்றாக விற்கப்படுகின்ற செயற்கை இனிப்பு வகைகளில் சர்க்கரை இல்லாவிட்டாலும் இவை நம்மை அதிகமாகச் சாப்பிடச் செய்கின்றன. அப்படி நாம் அதிகமாகச் சாப்பிடும் பொழுது அதன்மூலம் நம் உடல் நலத்தை அவை பாதிக்கின்றன.
2. பதப்படுத்தப்பட்ட வெள்ளைமாவு: இந்தப் பிரிவின் கீழ் வெள்ளை மாவால் செய்யப்படுகின்ற வெள்ளை ரொட்டி, வெள்ளை சாதம், நூடுல்ஸ் மற்றும் கேக் வகைகள், மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கண்ட ஸ்டார்ச் சத்து மிகுந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் சர்க்கரைப் பண்டங்கள் போலவே குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளை ஏற்றிவிடுகின்றன. இன்சுலினை உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த கூடுதலான ஸ்டார்ச் சத்தும் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. இப்படி வெள்ளை மாவை சாப்பிடுவதற்குப் பதிலாக முழு கோதுமை மற்றும் அரிசியிலிருந்து செய்யப்படுகின்ற உணவுப் பண்டங்களை சாப்பிட்டால் மேற்கண்ட பாதிப்புகளை நாம் தவிர்க்கலாம்.
3. மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்து: இப்பிரிவின் கீழ் ஹைட்ரஜன் கலந்த எண்ணெயால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களான மார்ஜரின், உருளைகிழங்கு வறுவல் மற்றும் பேக்கரிப் பண்டங்கள் எல்லாம் அடங்கும். ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் பண்டங்களை பயன்படுத்தும் பொழுது இந்த எண்ணெயில் இருக்கின்ற கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்பட்டு குறைபாடுள்ள மாற்றம் செய்யப்பட்டுள்ள கொழுப்புச் சத்துக்கள் வந்துவிடுகின்றன.
உடல் நலத் தாக்கம்: இப்படி மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் நம் உடல் நலத்திற்கு ஒத்துவருவதில்லை. நம்முடைய ரத்தக் குழாய்களில் இவை அடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் நம் உடம்பிலுள்ள செல்களில் இன்சுலினுக்கு வழிவிடும் கதவுகளை மூடுகின்றன.
4. ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள்: இந்தக் கொழுப்புச் சத்து மாமிச உணவிலும், வறுவல் செய்யப்பட்ட உணவிலும், வெண்ணெய், ஐஸ்கிரீம், மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயிலிலும் இந்தக் கொழுப்புச் சத்து இருக்கின்றது.
உடல் நலத் தாக்கம்: ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், இவற்றை சாப்பிடும் பொழுது தேவையில்லாத கொழுப்புச் சத்து நம் உடம்பில் சேருகின்றது மற்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றது. இன்சுலின் உபயோகம் குறைகின்றது. தேங்காய் எண்ணெயில் இந்தக் கொழுப்புச்சத்து மிகுந்து உள்ளது இருந்தாலும் பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மிக நல்லதாகும். தேங்காய் எண்ணையில் உள்ள நடுத்தரமான கொழுப்பு அமிலங்கள் நம் ரத்த ஓட்டத்தில் சேராமல் ஈரலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே ஈரலில் அவை நேரடியாக எனர்ஜியாக மாற்றப்படு கின்றன.
5. கெமிக்கல்ஸ்: இந்தப் பிரிவின் கீழ் தாது வகைகள், புகையிலை, காபி மற்றும் தேநீரில் உள்ள கஃபின் என்ற கெமிக்கல் ஆகியவை அடங்கும்.
உடல் நலத் தாக்கம்: மதுபானங்களும், புகையிலையும் நம்முடைய ஈரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காபியில் இருக்கும் கஃபின் கெமிக்கல் நம் நரம்புகளைத் தூண்டி விடுகின்றது. கஃபினால் நமக்கு இன்சுலின் சுரப்பது அதிகரிக்கலாம். கார்ன்சிரப் மற்றும் வெள்ளை சர்க்கரை மற்றும் ஹைட்ரஜன் கலந்த சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் எல்லாம் ஜீரணமாவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதால் அந்த அளவிற்கு நம்முடைய உடம்பிலுள்ள எனர்ஜி விரயமாகின்றது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்கப்படும் பல மருந்துகளால் நம்முடைய ஈரல் மற்றும் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகின்றது.
ஐந்து பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
நம் உடம்பிற்கு ஏற்ற கெமிக்கல் பாலன்ஸை உண்டுபண்ணி நம் உடம்பை நன்றாகப் பராமரித்து நோய் நொடியிலிருந்து காப்பாற்றும் சக்தி படைத்த உணவுப் பண்டங்கள் 5 உள்ளன. அவையாவன. காய்கறிகள் மற்றும் பழவகைகள், வடிகட்டப்பட்ட தண்ணீர், மெலிந்த புரதச் சத்து, தனிப்பட்ட கலப்பில்லாத ஒமேகா 3 கொழுப்புச் சத்து மற்றும் முழு தானிய வகைகள்.
1. காய்கறிகள், பழவகைகள்: பயனுள்ள காய்கறிகள் மற்றும் பழவகைகள் என்று நாம் நிறைய சொல்லலாம். பெரும்பாலான பயனுள்ள காய்கறிகளும், பழவகைகளும் நல்ல பிரகாசமான நிறம் கொண்டவைகளாக இருக்கும். முட்டைக்கோஸ், காலிபிளவர், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ் வகைகள் மற்றும் டர்னிப் ஆகியவைகளை உதாரணமாகச் சொல்லலாம். பீட்ரூட், கேரட், தக்காளி ஆகியவைகளும் இவற்றில் அடங்கும். ஆப்பிள், திராட்சை, ஏப்ரிகாட், எலுமிச்சை, ஆரஞ்ச், பப்பாளி, மாதுளம்பழம் போன்ற பழங்களும் இவற்றில் சேரும்.
உடல்நலத் தாக்கம்: முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற காய்கறிகள் நிறைய நார்சத்து கொண்டவைகளாக இருப்பதால் உணவை நிதானமாக ஜீரணம் செய்ய உதவுகின்றது. அப்படி நிதானமாக ஜீரணம் செய்யும் பொழுது சர்க்கரை ரத்தத்தில் கலப்பதும் நிதானமாக நடக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழவகைகளும் இதேமாதிரியே செயல்படுகின்றன. இப்பழங்களிலும், காய்கறிகளிலும் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்திற்கும் கொலஸ்ட்ராலையும் அகற்றவும் உதவுகின்றது.
அதிக நார்ச்சத்து கிடைப்பது மட்டுமில்லாமல், மேற்கண்ட பழங்களும் காய்கறிகளும் புரதச்சத்து, என்சைம்கள் மற்றும் விட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றையும் உடலுக்கு வழங்குகின்றன. மேலும் இவற்றில் காணப்படுகின்ற பொட்டாசீயம், மக்னிசீயம். ஃபாலிக் ஆசிட் மற்றும் என்சைம்கள் நம்முடைய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களை விரிவுபடுத்தி உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமலும் வழி செய்கின்றது.
பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகள் நம் உடம்பிற்கு நல்ல கொலஸ்ட்ராலை வழங்குகின்றன. ரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன. ஏப்ரிகாட் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் உள்ள அமிலங்கள் புற்றுநோயை தடுக்க உதவுகின்றன. மேலும் ஈரலின் பாதுகாப்பிற்கு உதவுகின்றன. எலுமிச்சம் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உபயோகமான ஒன்று. ஏனென்றால், உடம்பில் சர்க்கரை அதிகமாக சேரும் பொழுது ஏற்படக் கூடிய கூடுதல் அமிலத்தன்மையை எலுமிச்சம்பழம் குறைக்கின்றது. மேலும் மற்ற பழங்களைவிட, எலுமிச்சம் பழத்தில் சர்க்கரை குறைவு. மேலும் நமது பற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்தவும் எலுமிச்சம் பழம் உதவுகின்றது. எலுமிச்சம் பழம் புளிப்பாக இருந்தாலும் உடம்பில் அதனுடைய செயல்பாடு காரத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. அமிலத்தன்மை உடம்பில் அதிகரிப்பதால் விளைகின்ற மூட்டுவலிக்கு இது ஓர் எதிர்ப்பாக அமையும். ஆங்கிலத்தில் கிரேப் புரூட் என்றழைக்கப்படும் பம்பளிமாஸ் பழம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றது. பம்பளிமாஸ் விதைகள் மலச்சிக்கல், வாயு தொந்திரவு ஆகியவற்றைத் தடுக்கின்றன. இந்த நார்ச்சத்து மிகுந்த மேற்கண்ட காய்கறிகள் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று வருகின்ற ஆர்வத்தையும் குறைக்கின்றது. இருந்தாலும் வாழைப்பழம், பைன் ஆப்பிள், வாட்டர் மெலன் போன்ற பழங்களில் நிறைய சர்க்கரை சத்து இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

2. வடிகட்டிய தண்ணீர்
: முனிசிபல் குழாய்களிலிருந்து கிடைக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் என்று சொல்ல முடியாது. அதில் குளோரின், மற்றும் தேவையில்லாத தாதுக்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே முனிசிபல் குழாய்களில் வரும் தண்ணீரை வடிகட்டுவதற்காக வீட்டில் அக்வா கார்டு என்ற வடிகட்டும் மெஷினை வைத்துக் கொள்வது நல்லது. பழம் மற்றும் காய்கறிகளில் இருக்கின்ற நீர் குழாய்களில் வரும் நீரைவிடத் தூய்மையானது. காய்கறிகளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் சாறை அப்படியே சாப்பிட்டால், அது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. குடிநீரில் குளோரின் அதிகமாக இருந்தால் அதுவே சிறுநீரை சேகரிக்கும் பிளேடரில் புற்றுநோய் வருதற்கு காரணமாக அமையும். அக்வாகார்டின் மூலம் குளோரினை அகற்றி விட்டு அக்குடி நீரை உபயோகப்படுத்தினால், அக்குடி நீர் நம்மை பாதிக்காது.
உடல் நலத்தாக்கம்: தண்ணீரின் மூலமாகத்தான் நம் உடலிலுள்ள செல்களுக் கெல்லாம் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் செல்களுக்குள் தண்ணீர் இருப்பதால்தான் செல்களும் மென்மையாக இருக்கின்றன. நம் உடம்பின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் தண்ணீர் உதவுகின்றது. இப்படித் தண்ணீருக்கு பல உபயோகங்கள் இருப்பதால், இருப்பதிலேயே மிகச் சிறந்த தண்ணீரான வடிகட்டிய தண்ணீரை நம் உடம்பிற்கு வழங்குவது நல்லது. தண்ணீர் உடம்பிற்கு நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் தவறுதான். நாம் அளவிற்கு அதிகமாக குடிக்கும் பொழுது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதன் விளைவாக நம் உடம்பிற்கு தேவையான பல வகை தாதுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறுவதால் இவற்றை யெல்லாம் உடம்பு இழக்க நேரிடும்.
3. மெலிந்த புரதச்சத்து: இந்தப் பிரிவின் கீழ் சால்மன், சார்டின், டூனா, மேக்கரல், டிலாப்பியா ஆகிய மீன் வகைகளும், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், தோல் எடுக்கப்பட்ட கோழிக்கறி, தோல் எடுக்கப்பட்ட வான் கோழிக்கறி, ஆட்டுப் பால், கொழுப்புச்சத்து குறைந்த தயிர், இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகள் இட்ட முட்டைகள் ஆகியவை இவற்றில் அடங்கும். கடல்வாழ் உயிரினங்களான இறால், நண்டு போன்றவைகளும் இதில் அடங்கும்.

உடல் நலத்தாக்கம்
: மேற்கண்ட உணவு வகைகள் நம்முடம்பிற்குத் தேவையான அமினோ ஆசிடுகளை வழங்குகின்றன. அதே சமயத்தில் பால் பண்ணைகளில் கிடைக்கும் தீவனங்களை உண்டு வளரும் கால்நடைகளின் மாமிசத்தை சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களையும் தவிர்க்கின்றன. மேலும் இந்த உணவு வகைகள் நம் ஈரலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் க்ளோககான் என்ற சர்க்கரை பொருளை திறம்பட உபயோகிப்பதற்கு நம் உடம்பிற்கு உதவுகின்றன. திறம்பட உபயோகிப்பதால் இன்சுலின் சுரப்பதும் குறைகின்றது. இன்சுலின் சுரப்பு குறைவதால், கொழுப்புச்சத்து மற்றும் கொலஸ்ட்ரால் சத்து நம் உடம்பில் கூடுவதும் குறைகின்றது. புளிப்படைந்த தயிர் சாப்பிடுவதால் நம் சிறுகுடலில் உள்ள ஜீரணத்திற்கு உதவுகின்ற நுண்ணுயிர்கள் வளர்கின்றன. இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகளை உண்ணும் பொழுது, அவைகளின் மூலம் நம்முடம்பிற்கு ஃபாலிக் ஆசிட், கோலின் மற்றும் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கிடைக்கின்றன. இவை மூன்றும் நம்முடைய இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்புகளுக்கு உதவுகின்றன.

4. ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள்:
இப்பிரிவின் கீழ் தனித்த ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, ஒமேகா 3 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, மற்றும் ஒமேகா 6 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து ஆகியவை அடங்கும். தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயிலும், முந்திரி கொட்டைகளிலும், மணிலா கொட்டைகளிலும், ஆல்மண்ட் கொட்டைகளிலும் நிறைய இருக்கின்றது. மேலும் இந்தக் கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயில் 75 % அளவிற்கு இருக்கின்றது. மேலும் ஹைட்ரஜன் சேராத இந்த தனித்த கொழுப்புச்சத்தை உண்ணும் பொழுது, ஹைட்ரஜன் சேர்ந்த கொழுப்புச் சத்துக்கள், மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகியவற்றினால் விளைகின்ற உடல் நல பாதிப்புகள் இருப்பதில்லை. ஆகவே நாம் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு சிறந்த எண்ணெயாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒமேகா 3 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச்சத்தும் ஓர் ஆரோக்கிய மான கொழுப்புச் சத்தாகும். இந்தக் கொழுப்புச் சத்து பூசணி விதைகள், வால்நட் கொட்டைகள் மற்றும் சால்மன், சார்டின், டூனா மற்றும் மேக்ரல் ஆகிய மீன் வகைகளில் கிடைக்கின்ற எண்ணெயிலும் இருக்கின்றது. ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி மற்றும் பார்ஸ்லி போன்ற தாவரங்களில் இருந்து கிடைக்கும். ஒமேகா 6 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் வால்நட் கொட்டைகளிலும் மற்றும் சூரியகாந்தி விதைகளிலும் கிடைக்கின்றன.
உடல் நலத்தாக்கம்: தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களும் அத்தியாவசிமான கொழுப்பு அமிலங்களும் நம்முடைய இதயம் மற்றும் ரத்த ஓட்ட ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகின்றன. உடம்பு இவற்றை தானே தயார் செய்து கொள்ள முடியாதபட்சத்தில் தாவர பொருட்கள் மற்றும் காய்கறிப் பொருட்களிலிருந்து இவற்றை நம் உடம்பு சேகரிக்கின்றது. இவை நம்முடைய இதயம் மற்றும் மூளையின் செயல்பாடு மற்றும் தசை வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கெல்லாம் உதவுகின்றன. அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் பிராணிகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்தை போல் நம் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது இல்லை.

5. முழுதானியங்கள்:
இப்பிரிவின் கீழ் பார்லி, ஓட்ஸ் மற்றும் பதப்படுத்தப்படாத முழு அரிசி ஆகியவை அடங்கும். இவைகளிலிருந்து நமக்கு பி காம்பளக்ஸ் விட்டமின்கள், விட்டமின் உ, குரோமியம், மக்னீஷியம் போன்ற தாதுக்களும், செல்லுலோஸ் என்ற கரையாத நார்ச்சத்தும் கிடைக்கின்றன.
உடல் நலத்தாக்கம்: முழு ஓட்ஸ் தானியங்களில், 55 % கரைகின்ற நார்ச்சத்தும், 45 % கரையாத நார்ச்சத்தும் அடங்கி இருக்கின்றன. இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது. மேலும் நமக்கு ரத்த அழுத்தமும் குறைகின்றது. வெள்ளை ரொட்டியில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் நீக்கப்படுவதால், முழு தானியத்திலிருந்து செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் அந்த ரொட்டியில் நமக்கு வேண்டிய புரதச்சத்து மற்றும் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து எல்லாம் அப்படியே இருக்கும். மேற்கூறிய 5 பயனுள்ள உணவு வகைகளும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியவை. ஆகவே இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ஜீரண சிஸ்டம் அதிக சிரமப்படாமல் வேலை செய்கின்றது.
பயனுள்ளவைகளாகக் கருதப்படும் உணவு வகைகள் எல்லாம் காரத்தன்மை கொண்டவை. அதே சமயத்தில் நம் உடம்பை சுத்தப்படுத்தி நம்முடைய எடையை குறைக்கும் தன்மை கொண்டவை. பயனற்ற உணவுகளாக கருதப்படுபவை எல்லாம் அமிலத்தன்மை கொண்டிருப்பவை. அதே சமயத்தில் நம்முடம்பில் வேண்டாத கழிவுகள் சேகரமாவதற்கும் எடை கூடுவதற்கும் காரணமாக இருப்பவை. நம்முடைய உடம்பின் செல்களுக்குள் சேகரமாகும் அமிலக் கழிவுகள் நம்முடைய செல்களின் சுவர்களை இறுக வைக்கின்றது. இப்படி இறுகிப் போவதால் செல்களால் ஊட்டச் சத்துக்களை ரத்த ஓட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாமல் போகின்றது. இதனால் நம் உடம்பின் செல்கள் ஊட்டமின்றி பட்டினி கிடக்க நேரிடுகின்றது. இப்படி அமிலக் கழிவுகள் செல்களுக்குள் அதிகமாகச் சேர்வதால் நம்முடைய ஈரல், சிறுநீரகம் போன்றவைகள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கின்றது.
பெரும்பாலானவர்கள் 80% அமிலத்தன்மை கொண்ட உணவுகளையும், 20% தான் காரத்தன்மைக் கொண்ட உணவுகளையும் சாப்பிடுகின்றார்கள். இதன் விளைவாக நம் உடம்பின் செயல்படும் திறன் நாளடைவில் குறைந்து கொண்டே போகின்றது. இந்த விகிதங்களை மாற்றி காரத்தன்மை கொண்ட உணவுகளை 80%ஆகவும், அமிலத் தன்மை கொண்ட உணவை 20%ஆகவும் நாம் மாற்ற வேண்டும். மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை குறைக்கும் பொழுது அமில உணவுகளை உட்கொள்ளுவது குறைகின்றது. பச்சை காய்கறிகளை நிறைய உண்ணும் பொழுது காரத்தன்மை கொண்ட உணவுகள் நம் உடம்பில் அதிகம் சேருகின்றது.
நார்ச்சத்து: நார்ச்சத்து ஒரு பிரதான ஊட்டச்சத்தாகக் கருதப்படவில்லை. என்றாலும், 7 முக்கியமான ஊட்டச்சத்துக்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும் குளுக்கோஸ் லெவலை குறைப்பதற்கு நார்ச்சத்து மிகவும் உதவுகின்றது. நார்ச்சத்து கரைவது, கரையாதது என்று இரு வகைப்படும்.
கரைகின்ற நார்ச்சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது ஏனென்றால் நம் உடம்பில் நிகழும் செறிமானத்தை அது நிதானப்படுத்துகின்றது. செறிமானம் நிதானப்படுவதால் சர்க்கரை நம் ரத்த ஓட்டத்தில் கலப்பதும் சீராக இருக்கின்றது. நம்முடைய சிறு குடலில் சேருகின்ற கெமிக்கல்களை இந்த நார்ச்சத்துக்கள் உறிஞ்சிக் கொள்வதால் இந்த கெமிக்கல்களிலிருந்து கொலஸ்ட்ரால் தயாரிக்கப்படுவது குறைகின்றது. கரைகின்ற நார்ச்சத்து வயிறு நிரம்பிவிட்ட உணர்வைக் கொடுப்பதால் நம்முடைய பசியும் அந்த அளவிற்கு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஓட்ஸ், தவிடு மற்றும் சைலியம் தவிடு கரையும் நார்ச்சத்திற்கு சிறந்த மூலப்பொருட்கள் ஆகும். கரையாத நார்ச்சத்து சிறுகுடலில் உள்ள உணவுப் பிண்டத்திற்கு பருமன் சேர்க்கின்றது. அப்படிப் பருமன் சேர்ப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எளிதாக மலம் கழிக்க முடிகின்றது. முழுத்தானியங்கள், ஆப்பிள் தோல், மற்றும் அரிசித் தவிடு ஆகியவை கரையாத நார்ச்சத்திற்கு சிறந்த மூலப் பொருட்கள் ஆகும்.
சர்க்கரை, உப்பு, சாக்லேட் மற்றும் காபிக்கான மாற்றுப் பொருட்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை,உப்பு, சாக்லேட் ஆகியவற்றிற்கான மாற்றுப் பொருட்கள் என்ன உட்கொள்வது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சர்க்கரை:
இருபதாம் நூற்றாண்டின் பாதியிலேயே சர்க்கரையின் உபயோகம் ஏராளமாக அதிகரித்து விட்து. இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் 5 பவுண்டு சர்க்கரைதான் ஓராண்டிற்கு உபயோகித்து வந்தார். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் பாதியில் இத்தனி நபர் சர்க்கரை உபயோகம் 130 பவுண்டாக அதிகரித்து விட்டது. இது 26 மடங்கு உபயோகம் அதிகரிப்பதைக் காட்டுகின்றது. பால் மற்றும் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆனால் உணவு தயாரிப்பாளர்கள் செயற்கையாக தாங்கள் தயாரிக்கும் எல்லா உணவுகளிலும் சர்க்கரையை சேர்க்கின்றார்கள். கார்ன் சிரப், குளுக்கோஸ், புருக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை எல்லாம் சர்க்கரையின் பல்வேறு வடிவங்களாகும்.
பதப்படுத்தபட்ட சர்க்கரை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை விரைவில் ஏற்றுவதால், உணவு தயாரிப்பாளர்கள் இப்படி விரைவில் குளுக்கோஸின் அளவை ஏற்றாத செயற்கை இனிப்புகளைத் தயாரித்துள்ளார்கள். இந்த மாற்று இனிப்புப் பொருட்களால் உடல் நலத்திற்கு கெடுதல் வர வாய்ப்புள்ளது. இவற்றிற்கு பதிலாக நாம் சின்னமன், வனிலா, மிண்ட் ஆகியவற்றை சாப்பிடலாம். இவைகளில் இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் அதே சமயத்தில் இவை நம் உடம்பில் சர்க்கரையையோ, அல்லது கூடுதல் கலோரிகளையோ சேர்க்காது.
உப்பு:
உப்பு என்று நாம் அழைக்கும் சோடியம் குளோரைடு என்பது நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான ஒரு கெமிக்கல் ஆகும். நம்முடைய தற்போதைய உணவுப் பழக்க வழக்கங்கள் தேவைக்கதிகமாக நம்மை உப்பை சாப்பிட வைக்கின்றன. அதே சமயத்தில் தேவையான பொட்டாஸியம் போன்ற கெமிக்கல்களை உட்கொள்ளுவதை யும் குறைக்கின்றன. நாம் உப்பு உட்கொள்வதைக் குறைத்து, பொட்டாசியம் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும். நம் உடம்பில் ஒரு முறையான உப்பு மற்றும் பொட்டாசியம் விகிதம் இருக்க வேண்டும். விகிதம் அதிகமாக இருந்தால் செல்லுக்குள் உப்பு அதிகமாகத் தங்கிவிடும். அப்படித் தங்கும் பொழுது தண்ணீரும் அதிகமாக செல்லுக்குள் வந்து விடும். இதனால் செல் வீக்கமடைந்து வெடிக்க நேரிடும். கடலில் தயாராகும் உப்பு, இந்த உப்பு மற்றும் பொட்டாசியத்திற்கிடையே உள்ள விகிதத்தை சரியாகக் கொடுக்கின்றது. ஆகவே, நாம் கடல் உப்பை பயன்படுத்துவது நல்லது. அதே சமயத்தில் நாம் கேனில் விற்கப்படும் ஜுஸ் மற்றும் சூப் வகையறாக்களை உட்கொள்ளுவதைக் குறைப்பது நல்லது.
சாக்லேட்:
சாக்லேட்டில் கஃபின் என்ற கெமிக்கல் இருக்கின்றது. அதன் காரணமாக சாக்லேட் சாப்பிடும் பொழுது நமக்கு ஓர் உற்சாகம் கிடைக்கின்றது. இது நாளடைவில் நமக்கு ஒரு விடமுடியாத பழக்கமாக மாறலாம். வெள்ளை சாக்லேட் மற்றும் பால் சாக்லேட்டுகள் சுகர் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை. ஆனால் கறுப்பு நிறச் சாக்லேட் ஆன்டி ஆக்ஸைடண்ட் திறன் கொண்டது. ஆகவே நாம் பால் சாப்பிடுவதற்குப் பதிலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடுவது நல்லது.
காபி:
காபி தற்போது மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது. இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கப்பிற்கு மேல் நாம் காபி குடிக்கும் பொழுது நம்முடைய இன்சுலின் அளவு அதிகமாகி அதன்மூலம் நம் உடம்பில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரெகுலராக நாம் குடிக்கின்ற காபியைவிட சிக்கோரி, வேர்கனன், பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கோரி காபி மிகவும் நல்லது. சிக்கோரி காபியில் கஃபின் குறைவாக உள்ளது. அதே சமயத்தில் நம் ஈரலையும் பலப்படுத்தக் கூடியது. சோயா பீனிலிருந்து தயாரிக்கப்படும் சோயா காபியும் கஃபின் இல்லாமல் இருக்கின்றது. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் காபிச் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் காபியை நாம் ரேஷி என்றழைக்கப்படும் காளானுடன் சாக்லேட் கலந்து சாப்பிட்டால் அது நம்முடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் பச்சை நிற டீயில் கஃபின் குறைவாக உள்ளது என்பதால் ரெகுலர் காபியைவிட பச்சை நிற டீ நல்லது.
உணவு தயாரிப்பு:
நம் உடம்பிற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுதும் நாம் சரியான முறையில் அதை சமைக்காவிட்டால் அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் எல்லாம் வீணாகிப் போகின்றன. உதாரணமாக ஆப்பிளை நாம் பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தெல்லாம் நமக்கு வீணாகாமல் அப்படியே கிடைக்கின்றன. ஆனால் அதை நம் பழச்சாறாக மாற்றும் பொழுது, அதிலுள்ள நார்ச்சத்தையெல்லாம் நாம் இழக்க நேரிடுகின்றது. தவறான சமையலின் காரணமாக மற்ற உணவு வகைகளும் இம்மாதிரியே விட்டமின்களையும், என்சைம்களையும், தாதுப் பொருட்களையும் இழக்க நேரிடலாம். ஆகவே இம்மாதிரி இழப்புகள் நேராமல் இருக்கும் பொருட்டு நம் சமையல் சம்மந்தமான சில முக்கிய விதிமுறைகளை பார்ப்பது நல்லது.
காய்கறிகளை அதிக வெப்பத்தில் வேக வைக்கும் பொழுது அவற்றில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பிகாம்ளக்ஸ் விட்டமின்கள் 30 % அளவிற்கு வீணாகின்றன. கொதிக்க வைத்தால் 75 % அளவிற்கு விட்டமின்கள் பறிபோகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கிவிடாத அளவிற்கு மட்டத்தைக் குறைத்துக் கொண்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நிறம் மாறி வலுவிழந்து குழம்புபோல் மாறியிருந்தால் அவை வீணாகிவிட்டன என்று அர்த்தம். பாத்திரத்திலிருந்து எடுக்கும் பொழுது அவற்றின் இயற்கையான நிறத்துடன் நொறுங்காமல் இருந்தால்தான் அவை முறையாக சமைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். கறி மற்றும் மீன் வகைகள் அதிக சூடு வைத்து வறுக்கும் பொழுது அவை நம் உடல் நலத்தை பாதிக்கும் பொருட்களாக மாறுகின்றன. அளவுக்கு மீறிய சூடு வைக்கும் பொழுது கறி மற்றும் மீன் வகைகளிலுள்ள புரதச்சத்தும்,கொழுப்புச் சத்தும் அவற்றின் இயற்கை தன்மையை இழந்து சர்க்கரை நோயாளிகளுடைய ரத்தக் குழாய்களை பாதிக்கும் தன்மை பெறுகின்றன. இத்தகைய பாதிப்பு வரக் கூடாது என்றால் மெலிந்த கறித்துண்டுகளைக் குறைந்த வெப்பத்தில் அதிக நேரத்திற்கு நாம் சமைத்துக் கொள்வது நல்லது. மேலும் கறியை வறுத்து எடுக்கும் பொழுது ஆலிவ் ஆயிலை நாம் தடவி விட்டோம் என்றால் வறுத்த கறி உடன் ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கலாம்.
எண்ணெயை போட்டு சமைக்கும் பொழுது, எண்ணை மிகவும் சூடு ஏறினாலும் சமையலை அது பாதிக்கும். வேகவைத்த காய்கறிகளின் மேல் பச்சை எண்ணெயை விட்டுக் கொள்வது நல்லது. சமையலுக்கு ஆலிவ் ஆயிலை பயன் படுத்துவது எப்பொழுதும் நல்லது. அதே எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தி சூடு ஏற்றிக் கொண்டு இருந்தால், அந்த எண்ணெயின் தன்மையே மாறி புற்று நோயை உண்டாக்கக்கூடிய வேண்டாத எண்ணெயாக மாறிவிடுகின்றது. ஆகவே எண்ணெயில் சமைக்கும் பொழுது சூட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. சோயாபீன் எண்ணெய் சூடேறினால் கெட்டுப் போகும் தன்மைக் கொண்டது. ஆகவே அதற்குப் பதிலாக சூட்டைத் தாங்கக் கூடிய தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.
மைக்ரோவேவ் ஓவனில் குளிர்ந்து போன பண்டங்களை சூடேற்றுவதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமையலுக்கு அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அந்த மைக்ரோவேவ் கதிர்கள் முக்கியமான என்சைம்களை அழித்துவிடக் கூடியவை.
பழச்சாறு: தினமும் 6 முதல் 9 கப் காய்கறிகளையும் பழங்களையும் பச்சையாக சாப்பிடு வது பிடிக்கவில்லை என்றால் பழச்சாறாக மாற்றி சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழச்சாற்றைவிட காய்கறிகள் சாற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. பழச்சாறுகள் நம் உடம்பில் காரத்தன்மையை சேர்க்கக் கூடியவை. இப்படி உடம்பில் காரத்தன்மை சேரும் பொழுது அமிலத்தன்மை சேருவது குறைக்கப்படுகின்றது. பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோபில் நம்முடைய சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றது. ஊட்டச்சத்து பொடிகளை மாத்திரைகளாக உட்கொள்ளாமல் நாம் காய்கறிச் சாற்றோடு கலந்து உட்கொள்ளும் பொழுது அவை வேகமாக ஜீரணிக்கப்படுகின்றன.
பழச்சாறுகளில் ஜீரணத்திற்கு உதவக்கூடிய என்சைம்கள் நிறைய உள்ளன. இதன் பலனாக, பழச்சாறுகளை நம் உடம்பு சிரமமில்லாமல் ஜீரணித்துக் கொள்கின்றது. மேலும் பழச்சாற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். உதாரணமாக நாம் இரண்டு கப் கேரட் ஜீஸ் சாப்பிடும் பொழுது அது ஒரு பவுண்ட் பச்சை கேரட் சாப்பிடுவதற்குச் சமமாகின்றது.
பச்சைக் காய்கறிச் சாறுகள் ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் ஆன்டிபயோடிக் போன்ற மருத்துவச் சக்தி வாய்ந்த ஊட்டச் சத்துக்கள் கொண்டுள்ளன. கேரட், செலரி, லெட்டூஸ் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடியவை. ப்ராக்கோலியில் உள்ள குரோமியம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியிலிருந்து பெறப்படும் பழச்சாறுகள் ஆன்டிபயோடிக் தன்மைக் கொண்டவை. வெள்ளரிக்காய் மற்றும் முட்டைக் கோஸிலிருந்து எடுக்கப்படும் சாறு ரத்த அழுத்தம் மற்றும் அசிடிடியை குறைக்கும் தன்மை கொண்டவை.

உணவின் தரம்:
இயற்கை உணவு மற்றும் செயற்கை உணவு: பூச்சி மருந்து அடிக்காமலும், கெமிக்கல் உரங்களை பயன்படுத்தாமலும் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவு இயற்கை உணவாகக் கருதப்படும். பூச்சி மருந்து மற்றும் கெமிக்கல் உரங்களுடைய உதவியுடன் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவைவிட, இயற்கையாக தயாரிக்கப்படும் உணவில்தான் அதிக விட்டமின்களும், தாதுக்களும் உள்ளன என்று நிரூபணமாகி உள்ளது. இயற்கை உணவை வாங்குவது செலவு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஒத்துவராது என்றால் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழம், காய்கறிகளை வாங்குபவர்கள் அவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவிவிடுவது நல்லதாகும்.
கேன்களில் விற்கப்படும் பழங்கள் அதிக சர்க்கரை கொண்டிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இம்மாதிரி கேன்களில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் சூப் வகைகள் ஆகியவற்றில் சோடியம் அதிகமாக இருக்குமென்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லதாகும்.
உணவுப்பண்டங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
கொழுப்புச் சத்து உடம்பில் அதிகம் சேருவது கெடுதல் என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் அதற்காகக் கொழுப்புச்சத்தை உணவிலிருந்து முற்றிலும் அகற்றுவதும் தவறாகும். தகுந்த அளவில் கொழுப்புச்சத்தை நாம் உட்கொள்வது உடம்பிற்கு நல்லது. நல்ல கொழுப்புச்சத்தை நாம் மீன்வகைகள், தாவர எண்ணெய் கள் மற்றும் தானியங்கள் கொட்டைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் அதிகமாக உடம்பில் சேர்ந்தால் நம் உடம்பிற்கு நல்லது இல்லை என்றாலும் சரியான அளவில் சாப்பிடும் பொழுது அது நமக்கு நல்லதுதான் செய்கிறது. கொலஸ்ட்ரால் நம்முடைய ஈரலில் தயாரிக்கப்படுகிறது. நம்முடைய உடம்பில் உள்ள செல்களுக்கு அது ஒரு திண்மை வழங்குகிறது. கொலஸ்ட்ரால் கூடுதலாக இருக்கும் பொழுது நம்முடைய ரத்தக் குழாய்களை அடைக்கிறது என்றாலும் அளவோடு அது இருக்கும் பொழுது இதயத்தை பாதிக்கக்கூடிய தனித்து சுதந்திரமாக இயங்கும் ஆக்ஸிஜன் கூறுகளின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது.
கொலஸ்ட்ராலை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் நிறைய பேர் முட்டையை முழுவதுமாகத் தவிர்க்கிறார்கள். ஆனால் இது ஒரு தவறான அணுகு முறையாகும். ஏனென்றால் முட்டையில் நிறைய புரதச்சத்துள்ளது. இதில் சோளின் ஒமேகா 3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஃபாலிக் ஆசிட் ஆகியவை கிடைக்கின்றன. இவையெல்லாம் நம்முடைய இதயத்திற்கு நல்லதாகும். முட்டையில் 200 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுபோக 4 மி.கி. கொழுப்புச்சத்துள்ளது. இக்கொழுப்புச்சத்தில் 2.4 கிராம் தனித்த கலப்பில்லாத கொழுப்புச் சத்தாகும். 0.6 கிராம் அளவிற்கு கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்தும் உள்ளது. இவையிரண்டும் நல்ல வகையான கொழுப்புச் சத்தாகும். ஹைட்ரஜன் கலந்துள்ள தவிர்க்கப்பட வேண்டிய கொழுப்புச்சத்து முட்டையில் 1.6 கிராம் அளவிற்குத்தான் உள்ளது. முட்டையில் உள்ள மஞ்சளை நாம் விலக்கினோம் என்றால் அதன் வழியே நாம் கொலஸ்ட்ராலை தவிர்த்து விடலாம். முட்டையிலுள்ள வெள்ளை பாகத்தில் மஞ்சளில் இருப்பதைவிட அதிக புரதச்சத்துள்ளது. மேலும் அதே சமயத்தில் வெள்ளைப் பாகத்தில் கொலஸ்ட்ரால் எதுவுமேயில்லை.
கொழுப்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதைப் பற்றி மக்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்டிருப்பதைப் போல் கார்போஹைட்ரேட் மாவுச் சத்துள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது பற்றியும் அச்சம் எழுந்துள்ளது. மாவுச் சத்தை அறவே தவிர்ப்பது என்பதும் சரியில்லை. தேவையான அளவிற்கு நாம் காய்கறிகள், தானியங்கள், பழவகைகளை சாப்பிடவில்லை என்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை கிடைக்காது போய்விடும். இவை பற்றாக்குறையானால் நாளடைவில் உடம்பில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமானவை என்று வர்ணிக்கப்படும் உணவுகள்:
தற்பொழுது மார்க்கெட்டில் நிறைய உணவுப் பண்டங்கள் ஆரோக்கிய மானவை என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இப்படிச் சொல்லப்படுகின்ற பல உணவு வகைகள் உண்மையில் உடம்பிற்கு நல்லவையில்லை. விளம்பரதாரர்கள் நம்மை அப்படி நம்ப வைக்கிறார்கள். கீழ்கண்ட உணவுப் பண்டங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
1. செயற்கை இனிப்புகள்: இந்த இனிப்புகளுடைய கலோரி மதிப்புகள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை ஆர்வமாக உட்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த இனிப்புகள் நம்முடைய பசியைத் தூண்டிவிடுகின்றன. இந்த வகை இனிப்புகள் பல சாதாரண டேபிள் சர்க்கரையுடன் குளோரினை கலப்பதால் உண்டாக்கப்படுகின்றன. பிர்ச் மரத்தின் பட்டையில் இருந்து எடுக்கப்படும் சைலீட்டால் என்ற இயற்கையான சர்க்கரை இந்த செயற்கை இனிப்புகளைவிட நம் உடம்பிற்கு நல்லது. ஏனென்றால் சைலீட்டால் சாப்பிடும் பொழுது நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு வேகமாக ஏறுவதில்லை.
2. அஸ்பிரின்: டாக்டர்கள் வலியை குறைப்பதற்கும், இதயத்தின் பாதுகாப் பிற்கும் நம்மை அஸ்பிரின் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால் அஸ்பிரின் சாப்பிடுவதால் நம்முடைய வயிறு புண்ணாகி வெந்து போகக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே அஸ்பிரினுக்குப் பதிலாக மீன்எண்ணெய் மற்றும் இஞ்சியைச் சாப்பிட்டால் நாம் விரும்பும் பாதுகாப்பு நம் இதயத்திற்குக் கிடைக்கும்.
3. பாட்டில் ஜுஸ்: இந்தப் பழச்சாறுகளில் சர்க்கரை மிகவும் அதிகமாக இருப்பதால் பழச்சாறை சாப்பிட்டவுடன் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக ஏறுகிறது. பதப்படுத்தப்பட்ட பழங்களிலிருந்துதான் இந்த பாட்டில் ஜுஸ் செய்யப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது இந்தப் பழங்களிலுள்ள விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவையெல்லாம் வீணாகிப் போகின்றன.
4. பாட்டில் குடிநீர்: மினரல் வாட்டர் பாட்டில் என்று விற்கப்படுகின்ற இந்த குடிநீர் பாட்டில்கள் இவைகளை விற்கும் கம்பெனிகள் சொல்வதைப் போல கிருமிகள் இல்லாமல் இருக்கும் என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆகவே அவரவர் வீட்டில் காய்ச்சிய வடிகட்டி பெறப்படும் குடிநீரை குடிப்பது நல்லது.
5. கால்சீயம் மாத்திரைகள்: கால்சீயம் கார்பனேட் கலந்துள்ள இந்த மாத்திரைகள் எலும்பு மெலிவு நோயை தவிர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. ஏனென்றால் இந்த மாத்திரைகளில் காணப்படும் கால்சீயம் நாளைடைவில் நம் உடம்பில் சேர்ந்து சிறுநீரகத்தில் கல்லாக மாற வாய்ப்புள்ளது. நம்முடைய வழக்கமான உணவிலேயே நிறைய கால்சியம் இருப்பதால் நாம் இப்படி செயற்கை கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடத் தேவையில்லை.
6. சீரியல்: கடைகளில் விற்கப்படும் ஓட்ஸ் சீரியல் போன்றவைகளெல்லாம் மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்டவையாகும். அதே சமயத்தில் செயற்கை விட்டமின்களும் அதில் கலந்துள்ளன. மேலும் இப்படிப்பட்ட சீரியல்களில் சர்க்கரை அதிகமாகவும், இயற்கை விட்டமின்களும், நார்ச்சத்துக்களும் குறைவாகவும் இருக்கும். ஆகவே உண்மையிலேயே ஊட்டம் மிக்க காலை உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் இந்த சீரியல்களுக்குப் பதிலாக முழுமையான தானியங்களால் செய்யப்பட்ட சீரியல்களை உணவாக உட்கொள்ள வேண்டும்.
7. பால்: பால் மூலம் நமக்கு நிறைய கால்ஷியம் கிடைக்கிறது என்றாலும் நாம் பாலை அதிகமாக உட்கொண்டால் நம் உடம்பில் மக்னீஷியம் சேருவது தடைப்படும். அது நமக்கு நல்லதில்லை. ஏனெனில் மக்னீஷியம் நம் உடம்பிற்குத் தேவையான ஒரு ஊட்டமாகும். sterilized செய்யும் பொழுது பாலில் உள்ள கேசின் என்ற பால் புரோட்டீன் கெட்டுவிடுகிறது. அது கெடுவதால் உடம்பிற்குத் தேவையான என்ஸைம்கள் மற்றும் விட்டமின்கள் ஆ-6 மற்றும் ஆ-12 ஆகியவற்றையும் சேர்த்துக் கெடுக்கிறது. மேலும் sterilized செய்யும் பொழுது பாலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து போகின்றன. ஆகையால் நமக்கு கால்ஷியம் வேண்டுமென்றால் பாலுக்குப் பதிலாக சார்டின் மீன்களிலிருந்தும், கொட்டைகளிலிருந்தும் பெற்றுக் கொள்வது நல்லது.
8. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு: இந்த உணவுப் பண்டங்களில் சர்க்கரை குறைவாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் உடம்பைப் பாதிக்கக்கூடிய கார்ன்ஸிரப், ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் சோடியம் ஆகியவை கலந்திருக்கும். உண்மையில் சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனிப்பட்ட உணவுப் பண்டங்கள் கிடையாது. உணவுப்பண்டங்களை விற்கின்ற கம்பெனிகள் மக்களை கவருவதற்காக இப்படி போலியான விளம்பரங்களை செய்கின்றன.

9. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால் குறைந்த பண்டங்கள்:
இவை எல்லாமே மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைவாகவும், நம் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய கெமிக்கல் அதிகம் கொண்டதாகவும் இருக்கும். குறைந்த மாவுச்சத்து என்றால் கலோரியும் குறைந்து விட்டதாக அர்த்தமில்லை. கொழுப்புச்சத்து குறைந்த பண்டங்கள் அதே சமயத்தில் சர்க்கரை அதிகமாகக் கொண்டிருப்பதால் இந்த சர்க்கரை நம்முடைய உடம்பில் கொழுப்பாக மாற்றப்படுவதால் இதுவும் நல்லதில்லை என்றாகிறது. இவற்றை உட்கொள்ளும் பொழுது இவை கூடுதலாக இன்சுலின் சுரப்பதற்குக் காரணமாகின்றன.
10. மாற்று கொழுப்புச்சத்து இல்லாத உணவுப் பண்டங்கள்: சில உணவுப் பண்டங்களில் இப்படியொரு முத்திரை குத்தி இருந்தாலும் அதனால் மாற்று கொழுப்புச் சத்து இல்லையென்றோ, ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இல்லை என்றோ அர்த்தமில்லை. ஒரு கரண்டி அளவிற்கு எடுத்துக் கொண்டால் அதில் 0.4 அளவிற்கு மாற்று கொழுப்புச் சத்து இருந்தால்தான் நாம் உண்மையில் மாற்று கொழுப்புச் சத்து இல்லை என்று சொல்லலாம். கச்ஞிடுடிணஞ் உள்ளிருக்கும் உணவுப் பண்டங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் தான் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இருக்கின்றதா இல்லையா என்று தெரியும்.
11. பீட்ஸா: பீட்ஸா உலகம் முழுவதும் பாப்புலராகி விட்டது. ஆனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது. ஏனென்றால் பீட்ஸாவிலுள்ள இடஞுஞுண்ஞுஇல் ஹைட்ரஜன் கலந்து கொழுப்புச் சத்து இருக்கிறது. அதிலுள்ள கறியிலுமிருக்கிறது. அதிலுள்ள கோதுமையில் மாவுச்சத்தும் அதிகமாக உள்ளது. ஆகவே, அசைவ பீட்ஸாவைவிட சைவ பீட்ஸாவை சாப்பிடுவதே நல்லது.
12. சோடா: சோடா பாப்புலரான பானமாக இருந்தாலும் அதில் நிறைய சர்க்கரை இருக்கிறது. மேலும் அதில் பாஸ்பரஸ் உள்ளது. இந்த பாஸ்பரஸ் கால்சியம் உடம்பில் சேர்வதைத் தடுக்கிறது. இதன் காரணமாக உடம்பில் அமிலத் தன்மை அதிகமாகிறது. 12 அவுன்ஸ் சோடா பாட்டிலில் 10 டீஸ்பூன் அளவிற்காவது சர்க்கரையிருக்கும். அது 120 கலோரிக்குச் சமமாகும்.
13. சர்க்கரையில்லாத தின்பண்டங்கள்: சர்க்கரையில்லாத திண்பண்டங்களில் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் பசியைத் தூண்டும் மறைமுகமான சர்க்கரை பொருட்கள் உள்ளன. இவற்றின் காரணமாக நம் உடலில் கூடுதல் கொழுப்புச் சத்து சேருகிறது.
14. விட்டமின் மாத்திரைகள்: இந்த மாத்திரைகளில் விட்டமின் அளவு குறைவாகவும், பிறசத்துகள் அதிகமாகவுமிருக்கும். ஆகவே, இவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் விட்டமின் ஊட்டச்சத்து குறைவாகத்தானிருக்கும். ஆகவே இவற்றிற்குப் பதிலாக இயற்கையாக நமக்கு விட்டமின் தரக்கூடிய உணவு பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
15. தயிர்: இயற்கையான தயிரை சாப்பிடுவது நல்லது.
ஊட்டத்திற்காகச் சாப்பிடும் கூடுதல் பண்டங்கள்
இவற்றை சாப்பிடுகின்றவர்களுடைய அடிப்படை உணவு ஊட்டம் மிக்கதாகவும் அவர் நன்றாக உடற்பயிற்சி செய்பவராகவும், இருந்தால்தான் இந்தக் கூடுதல் தின்பண்டங்கள் உதவியாக இருக்கும். அடிப்படை ஊட்டம் போதுமானதாக இல்லாத பொழுது இந்தக் கூடுதல் தின்பண்டங்களால் பயனில்லை.
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தால் அவர் முதலில் அந்த நோயை எதிர்க்கக்கூடிய சக்தியைக் கொடுக்கின்ற உணவை உட்கொள்வது நல்லது. அதற்கும் மேல் கூடுதலாக ஊட்டமயமான தின்பண்டங்களை சாப்பிட்டால் பலனிருக்கும். பொதுவாகவே நம்முடைய பிரதான உணவு ஊட்டமயமானதாக இருந்தால் நமக்கு வேண்டிய விட்டமின்களும், தாதுக்களும் அதிலேயே நிறைய கிடைக்கின்றது. அப்பட்சத்தில் நாம் கூடுதலாக சாப்பிடவும் தேவையில்லாமல் போகிறது.
உணவு விருப்பம்
சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் நிறைய கெமிக்கல்ஸ் நிறைந்த மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதால் நமக்குத் தேவையில்லாமல் பசி எடுக்கிறது. இந்த கூடுதல் பசியை அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தக் கூடுதல் பசி எப்படி உண்டாகிறது என்று பார்ப்போம். ஹார்மோன்களுடைய நார்மல் பேலன்ஸ் கெட்டுப் போவதால் இந்த கூடுதல் பசி வருகிறது. உதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது நோயாளிக்கு பசி எடுக்கிறது. இந்தப் பசியை தவிர்ப்பதற்காக அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிடுகிறார். இதன் காரணமாக தற்காலிகமாக அவருடைய ரத்தத்தில் சக்தி அதிகரிக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது மீண்டும் எனர்ஜி லெவல் குறைகிறது. அவர் மீண்டும் சர்க்கரை சாப்பிட்டால் மீண்டும் இம்மாதிரியேதான் நிகழும். அப்பட்சத்தில் இதற்கு முடிவு இல்லாமல் போகிறது. ஆகவே இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் நோயாளி நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
தேவையில்லாத பசி எடுக்கிறதென்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதற்குக் கிடைக்கவில்லை என்று அர்த்தமாகும். உடம்பிற்குத் தேவையானது விட்டமின்களும் தாதுக்களும் என்று புரிந்து கொள்ளாமல் நோயாளி கூடுதலாக மாவுச் சத்து மிகுந்த பண்டங்களைச் சாப்பிட்டால் உடம்பு வழங்கும் சிக்னலை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றாகிறது. அதனால் இந்தப் பசி மீண்டும் மீண்டும் திரும்ப வருகிறது. இந்தப் பசி இரு வகையானது. 1.உணர்வு மயமான பசி, 2. உடல் ரீதியான பசி.
1. உணர்வுமயமான பசி: நாம் சர்க்கரையும், கொழுப்புச் சத்தும் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பொழுது நம் உடம்பில் செரடோனின் என்ற ஹார்மோன் இருக்கிறது. அது சுரக்கும் பொழுது நமக்கு சந்தோஷம் அதிகரிக்கிறது. இதனால்தான் வருத்தமாக இருப்பவர்கள் அந்த நேரம் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார்கள். இப்படி ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குப் பதிலாக இந்த வருத்தத்திலிருந்து விடுபடுவதற்காக நாம் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது யாரேனும் நண்பரோடு பேசலாம். இப்படி செய்வதாலும் வருத்தம் குறைவதற்கு வாய்ப்புண்டு.
பண்டிகை நாட்களிலும், கொண்டாட்டங்கள் நிகழும் நாட்களிலும் மக்கள் அதிகமாகச் சாப்பிடுவதுண்டு. இதற்குப் பரிகாரமாக பண்டிகை நாட்களுக்கு முன்பே 5 நாட்களுக்கு நல்ல சாப்பாட்டை நிறைய சாப்பிட வேண்டும். அப்படி செய்யும் பொழுது பண்டிகை நாளன்று அதிகமாக சாப்பிட முடியாது. மேலும் பண்டிகை நாளுக்கு அடுத்த நாளும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பண்டங்களை அதிகம் சாப்பிட்டு, அதே சமயத்தில் நிறைய தண்ணீரும் குடித்தால், பண்டிகையன்று சாப்பிட்டதெல்லாம் சீக்கிரம் வெளியேறிவிடும்.
2. உடல் ரீதியான பசி: ஒருவருடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது சர்க்கரை மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் வேகமாக ஏறுகிறது. ஆனால் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ அதே வேகத்தில் பின்னர் இறங்கியும் விடுகிறது. அதற்குப் பரிகாரமாக நிறைய நார்ச்சத்தையும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களையும், ப்ராக்கோலி மற்றும் பழவகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகளை குடிப்பதற்குப் பதிலாக காய்கறி சாற்றை சாப்பிடுவது நல்லது.
Mohammad Sultan
நன்றி;உங்களுக்காக
Continue reading →

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி